news

News November 11, 2024

கற்றாழை Vs நெல்லிக்காய்: தலைமுடிக்கு எது சிறந்தது?

image

கற்றாழை, நெல்லிக்காய் இரண்டும் தலைமுடிக்கு நல்லதுதான். ஆனால் எது சிறந்தது என்பதை தலை முடிப் பிரச்னையைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். கற்றாழை உச்சந்தலையில் அதிக எண்ணெய் சுரப்பு, வெப்பத்தால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தும். நோய்த் தொற்றுக்களைப் போக்கும் நெல்லிக்காய் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே, பாதிப்புகளுக்கு ஏற்ப, எதைப் பயன்படுத்துவது என நீங்களே தீர்மானியுங்கள்.

News November 11, 2024

வெளிப்படையாக அறிக்கை அளிக்க இபிஎஸ் அறிவுறுத்தல்

image

கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று அதிமுக களஆய்வுக் கூட்டத்தில் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் பணிகளில் சுணக்கம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்திய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

News November 11, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை வெளுக்கப்போகுது

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.

News November 11, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14580760>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அங்கோர் வாட் – கம்போடியா (400 ஏக்கர்) 2) Non-Performing Assets 4) ஆனந்தி கோபால் ஜோஷி 5) Tachistoscope 6) லீச் அட்டைப்பூச்சி 7) ஹைட்ரஜன் 8) துயிலெழுப்பி. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 11, 2024

Beauty Tips: உதடு வெடிப்பா? இதை செய்யுங்கள்!

image

குளிர்காலத்தில் சிலருக்கு உதடுகள் வெடிப்பு ஏற்படும். வெளியே பார்ப்பதற்கு வறண்டு அசிங்கமாகவும், காய்ப்பு இருப்பது போலவும் காணப்படும். உதடுகளுக்கு ஊட்டமளிக்கவும், ரணத்தை சரி செய்யவும் இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். தினமும் இரவில் படுக்கப்போகும் முன் தேனுடன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை கலந்து உதடுகளில் மாய்ஸ்சரைசர் போல தடவி வந்தால் இதழ்கள் ஈரப்பதம் பெற்று மென்மையாகும்.

News November 11, 2024

தமிழகத்தில் மோசமடையும் கால நிலை மாற்றம்!

image

தமிழ்நாடு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 67 நாட்கள் தீவிர வானிலை தாக்கத்தைத் எதிர்கொண்டுள்ளதாகக் காலநிலை இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மழை, வெப்பநிலை பாதிப்பால் 25 பேர் உயிரிழந்ததாகவும், 149 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தில் கேரளா, கர்நாடகாவைத் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு

image

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என சர்ச்சையாக பேசியதால், அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவானார். இந்நிலையில், ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

News November 11, 2024

திட்டங்களுக்கு ‘கலைஞர்’ பெயர்: உங்கள் பதில் என்ன?

image

எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயரையா வைப்பது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நேற்று பதிலளித்த CM ஸ்டாலின், தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைப்பது என்று பதில் அளித்தார். பல்வேறு திட்டங்களுக்கு மறைந்த கலைஞர் கருணாநிதி பெயரை வைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? முதல்வர் ஸ்டாலின் கூறியது பற்றி என்ன நினைக்கிறீங்க?

News November 11, 2024

ஆதார் வைத்திருப்பவர்கள் இதை செய்தே தீரவேண்டும்!

image

இந்தியாவில் தனிநபர்களின் கைரேகையை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆதாரில் உள்ள கைரேகைகளை குளோன் செய்து, அதன் வழியே AePS முறையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தடுக்க ‘My Aadhaar’ போர்ட்டலில் உள்ள Biometric ஆப்ஷனை லாக் செய்து தரவுகளை பாதுகாக்கலாம். இவ்விதம் செய்வதன் மூலம் திருட்டைத் தடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News November 11, 2024

2026ல் பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்

image

பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவுடன் திமுக தான் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவுக்கும்,பாஜகவுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்ற இபிஎஸ் பேச்சை திரித்து பேசுவதாகவும் விளக்கமளித்தார்.

error: Content is protected !!