news

News October 29, 2025

பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

image

நகராட்சி நிர்வாக துறையில் <<18136226>>2,538 பேரிடம் பணம்<<>> வாங்கி கொண்டு பணி வழங்கியதாக கூறிய ED-ன் புகாரை அமைச்சர் KN நேரு மறுத்துள்ளார். அவரது விளக்கத்தில், *அரசுக்கு களங்கம் ஏற்படுத்த ED பொய் கூறுகிறது. *20.9.2024-ல் முறைப்படி அண்ணா பல்கலை., மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் முறையாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்வர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.

News October 29, 2025

இந்தியாவின் அதிரடியை தடுத்த மழை

image

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான <<18140028>>முதல் டி20 போட்டி<<>> மழையினால் மீண்டும் தடைபட்டுள்ளது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 9.4 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கெனவே மழையினால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

PM SHRI திட்டத்துக்கு ‘ரெட் சிக்னல்’ போட்ட கேரளா

image

கல்வி நிதிக்காக, NEP அடிப்படையிலான ‘PM SHRI’ திட்டத்தில் இணைய உள்ளதாக கேரளா அறிவித்தது. இது கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆளும் LDF-ல் உள்ள முக்கிய கட்சியான CPI-யே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தையும், CPI-ஐ சேர்ந்த 4 அமைச்சர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், ‘PM SHRI’-ஐ செயல்படுத்துவதற்கான வேலைகளை நிறுத்த சொல்லி CM பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News October 29, 2025

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா ஆஜர்

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக ED-யும் விசாரணையை தொடங்கியது. இதில், இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணா இன்று ஆஜரான நிலையில், அவரிடம் ED விசாரணை நடத்தி வருகிறது.

News October 29, 2025

₹29,000 சம்பளம், 600 பணியிடங்கள்: APPLY NOW!

image

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தில் காலியாகவுள்ள 600 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பொறியியல் டிப்ளமோ. வயது உச்ச வரம்பு: 40. தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹29,735. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE THIS.

News October 29, 2025

2026 தேர்தலுக்கு பின் பாஜக காணாமல் போகும்: ரகுபதி

image

2026 தேர்தலில் DMK தோல்வியடையும் என BJP தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, 2026-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்து பாஜக காணாமல் போகும் என்று தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பான EPS விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தனக்கு உள்ளே இருக்கும் வெறுப்பை தான் EPS வெளிப்படுத்தி வருகிறாரே தவிர, மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.

News October 29, 2025

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

2025 – 26ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் +1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. சைக்கிளுக்கான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகளுக்கு தலா ₹4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு தலா ₹4,375 மதிப்பிலும் சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் உத்தரவாத அட்டை வழங்குவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

News October 29, 2025

மாரி செல்வராஜுக்கு ’இயக்குநர் திலகம்’ பட்டம்

image

’பைசன்’ படத்தை பார்த்த வைகோ இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ’இயக்குநர் திலகம்’ என பட்டம் வழங்கியிருக்கிறார். அவருடைய 2 பக்க பாராட்டு மடலை மாரியிடம் கொடுத்த துரை வைகோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, பல கொடுமைகளை அனுபவித்து அர்ஜுனா விருது வரை சென்றவரின் சாதனையை இயக்குநர் சிறப்பாக எடுத்துள்ளதாக கூறினார். மேலும், சமூகத்தை நல்வழிப்படுத்தும் இதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

News October 29, 2025

Ex-Agniveers-க்கு புதிய அப்டேட்!

image

4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களே Agniveers. 4 ஆண்டுகள் முடிந்த பின், 25% பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவர். இந்த Ex-Agniveers-க்கு, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் அல்லது பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில், வேலை கிடைப்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News October 29, 2025

தமிழக அரசில் 1,429 காலியிடங்கள்.. ₹71,000 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 1,429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழும், 12-ம் வகுப்பில் Science குரூப்பும் படித்திருக்க வேண்டும் ➤Health Inspector/ Sanitary Inspector சர்டிபிகேட் இருக்கணும். சம்பளம்: ₹19,500- ₹71,900 வரை. நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!