India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புத்தாண்டின் முதல் நாளிலேயே வெள்ளி விலை கிலோவுக்கு ₹1,000 குறைந்துள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹256-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹2,56,000-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் நகை வாங்குவதை வாடிக்கையாக கொண்ட சிலர், இன்று காலை வெள்ளி வாங்க சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல கடைகளில் வெள்ளிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், புக்கிங் செய்தால் மட்டுமே வெள்ளி கிடைக்கும் நிலை உள்ளது.

நெல்லை தொகுதியில் சிட்டிங் MLA-வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் வேறு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் பாஜக எடுத்த சர்வேயில், தொகுதியிலுள்ள பட்டியலினத்தவர், நாடார் & யாதவ சமூகத்தினரிடையே அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளதே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது. இதற்கு பதிலாக, விருதுநகரின் சாத்தூரில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் தயார் நிலையில் இருப்பதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு, வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. இன்று (அ) நாளை ரொக்கம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாகவும், அதன் பிறகு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வளவு குடிக்கிறோம் என்ற அளவு தெரியாமல் குடித்துவிட்டு பலர் ஹேங்கோவர் ஆகியிருப்பாங்க. இதன் காரணமாக தலைவலி, குமட்டல், அஜீரணம், சோம்பல், வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். ஏலக்காய், இஞ்சி டீ குடித்தால் ஹேங்கோவரில் இருந்து விடுபடலாம். அதேபோல, எலுமிச்சை சாறுடன், மோர் கலந்து குடித்தால் குமட்டல் நிற்கும். அதிக தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும். SHARE IT.

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 85,409 புள்ளிகளுடனும், நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 26,181 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய்க்கு இருக்கும் திரைக்கவர்ச்சி பின்னணி, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு சவாலாக இருப்பதாக SG சூர்யா கூறியுள்ளார். திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ பாஜகவுக்கு இல்லை என்ற அவர், தவெகவை விடவும் பன்மடங்கு அதிகமாக பாஜக உழைத்தால் மட்டுமே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும், தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம் என தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை இன்று(ஜன.1) 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் இன்று தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு தான் மிகவும் மன வருத்தப்பட்டதாக ஜான்பாண்டியன் கூறியுள்ளார். ராமதாஸை வன்னியர்களுக்காக போராடிய போராளி என குறிப்பிட்ட அவர், தந்தையும் மகனும் இணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், இருவரையும் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, 2026 ஏப்ரல் முதல், வீட்டில் அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உலாவரும் செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வராது எனவும், முன்பு இருந்த சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது. அனைவரும் தெரிஞ்சுக்கணும் SHARE THIS.

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்று கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பொருளாதார சங்க மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியாத பாதையில் பயணிப்பதாக தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் அளவுகோல்களை வைத்தே, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுவதாக கூறிய அவர், உண்மையான வளர்ச்சியை அறிய, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.