India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN-ல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். டெங்கு எதிரொலியாக TN முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று X-ல் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

‘விக்ரம் 63’ படத்தை ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற அறிமுக இயக்குநர் தான் விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரியும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

TN-ல் SIR பணிகளை உள்நோக்கத்துடன் EC செயல்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் திருட்டுத்தனமாக நீக்கப்பட்டதாகவும், அதுபோல TN-ல் செய்வார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார். EC அறிவித்த அட்டவணையில் கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறையை தவிர்த்து மீதமுள்ள நாள்களில் 6.19 கோடி வாக்காளர்களிடம் SIR பணிகளை முடிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பல மாவட்டங்களில் நிறைவடைந்திருப்பதால், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடைசி நேரத்தில் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நல்வாய்ப்பாக, வாரந்தோறும் கலெக்டர் ஆஃபிஸில் நடைபெறும் குறைதீர் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க மனு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரிகள் பரிசீலித்து முடிவை தெரிவிப்பார்கள். SHARE IT.

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், ஒருசிலர் மட்டும், அனைத்து வடிவங்களில் சேர்த்து 500 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். அவர்கள் யார், எவ்வளவு ரன்கள் குவித்துள்ளனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.

*கிஷன் தாஸ் நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கல்யாணி பிரியதர்ஷன்’ ஹீரோயினாக நடிக்கவுள்ளார். *கவினின் ‘கிஸ்’ பட ஓடிடி உரிமையை ஜீ5 பெற்றுள்ளது. *சிரஞ்சீவியின் ‘மெகா158’ படத்தில் தான் நடிக்கவில்லை என மாளவிகா மோகனன் அறிவிப்பு. *லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் வாமிகா கபி.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர், கென்யா நாட்டில் அரிதான காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். சுருள் முடியுடன் ஆண் சிங்கத்தின் அழகை, மிக அழகாக படம் பிடித்துள்ளார். சிங்கத்தின் “புதிய ஹேர் ஸ்டைல்” SM-யில் வைரலாகி வருகிறது. இது உலகின் மிக அழகான சிங்கங்களில் ஒன்று. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த சிங்கம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

வாக்குகளை பெறுவதற்காக <<18139805>>PM மோடி டான்ஸ்<<>> கூட ஆடுவார் என ராகுல் காந்தி விமர்சித்ததை பாஜக கடுமையாக சாடியுள்ளது. லோக்கல் ரவுடி போல ராகுல் பேசுவதாகவும், PM மோடிக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு ஏழை இந்தியரையும் அவமானப்படுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளது. மேலும், நாட்டின் வாக்காளர்களையும், ஜனநாயகத்தையும் அவர் கேலி செய்துவிட்டதாகவும் சாடியுள்ளது.

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *துலாம்: தொழிலில் பிரகாசமான முன்னேற்றம். தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். *தனுசு: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். *மகரம்: வேலையில் ஊதிய உயர்வு. வியாபாரம் செழிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.