news

News January 9, 2026

BREAKING: பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு வெளியானது

image

சென்சார் பிரச்னையால், விஜய்யின் ஜனநாயகன் வெளியாகாத நிலையில், பொங்கலுக்கு பல நட்சத்திரங்களின் படங்களை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ கார்த்தியின் ‘வா வாத்தியார்’, மோகன்.ஜி-யின் ‘திரௌபதி 2’, சசிகுமாரின் ‘Freedom’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 9, 2026

தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது: கிருஷ்ணசாமி

image

கடந்த காலங்களில் திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி வைத்த புதிய தமிழகம், தற்போதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருக்கிறது. இந்நிலையில், தவெகவில் இருந்து முக்கிய தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக அக்கட்சியின் கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவை பார்ப்பதாகவும், தங்களை யார் வெற்றி பெற வைப்பார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி வைப்போம் எனவும் கூறியுள்ளார்.

News January 9, 2026

உண்மையான காதலுக்கு எண்ட் கார்டே கிடையாது!

image

முதல் காதலை மறக்கவே முடியாது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. டீன்-ஏஜில் காதலித்து, அப்போதே பிரிந்துவிட்டனர் ஜெயபிரகாஷும் ரேஷ்மாவும். விதிவசத்தால் அண்மையில் அவர்கள் சந்திக்க நேர்ந்துள்ளது. வாழ்க்கைத் துணைகளை இழந்த இருவரும் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட, தங்கள் பிள்ளைகளின் சம்மதத்துடன் 60-வது வயதில் மீண்டும் கரம்பிடித்துள்ளனர். இவர்களை வாழ்த்தலாமே!

News January 9, 2026

டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 8,000 பேர் மரணம்

image

இந்தியாவில் டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 49 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 8000 பேர் வரை உயிரிழப்பதாகவும் ICMR விஞ்ஞானி காமினி வாலியா தெரிவித்துள்ளார். அதிகம் பயன்படுத்தப்பட்ட புளோரோகுய்னோலோன் மருந்துக்கு டைஃபாய்டு கிருமிகள் தற்போது கட்டுப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் டைஃபாய்டு காய்ச்சலை சரியான பரிசோதனை மூலம் கண்டுபிடிக்காததாலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

News January 9, 2026

ரயில் டிக்கெட் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு வெளியானது

image

பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் டிக்கெட் புக்கிங்கில் 3% வரை தள்ளுபடி பெறலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. RailOne ஆப்பில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கே இந்த சலுகை கிடைக்கும். பெரும்பாலோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE.

News January 9, 2026

BREAKING: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

image

பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28-ம் தேதி தொடங்கி ஏப்.2-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2026

BREAKING: சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம்

image

CM ஸ்டாலின் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்சார் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. அதேபோல், ‘பராசக்தி’ படத்தில் தீ பரவட்டும், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட முக்கிய வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க: சசிகுமார்

image

ஆஸ்கர் விருதுக்கான பொது நுழைவு பட்டியலுக்கு தகுதியான 201 படங்களில் <<18807301>>’டூரிஸ்ட் பேமிலி’<<>> இடம்பெற்றுள்ளது. இதுபற்றி பேட்டியளித்த சசிகுமார், படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிப்பதா என நினைத்திருந்தால், இப்படியொரு படம் கிடைத்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். படத்தை வெற்றிபெற வைத்த மக்களுக்கும், கொண்டாடிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

‘மகன் மீண்டும் வருகிறான்’ 62 வயதில் கர்ப்பமான பெண்!

image

சீனாவின் ஜிலின் மாகாணத்தை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர், தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள IVF முறையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றில் வளரும் குழந்தை, தனது மகனின் மறுபிறவி என்று நம்பும் அவரின் வீடியோக்கள் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளன. பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வயதில் இது தேவையா என்றும், ஆரோக்கியம் முக்கியமல்லவா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News January 9, 2026

புயல் சின்னம்.. 13 மாவட்டங்களில் மழை அலர்ட்

image

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை, அரியலூர், செங்கை, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். கவனம் மக்களே!

error: Content is protected !!