news

News July 7, 2025

தமிழ் சினிமாவில் இந்திய கிரிக்கெட்டர்கள்

image

*லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் – ராஜா கைய வெச்சா (1990). *சீக்கா – ப்ரியமான தோழி. *சடகோபன் ரமேஷ் – சந்தோஷ் சுப்ரமணியம். *வருண் சக்கரவர்த்தி – ஜீவா. *ஹர்பஜன் சிங் – ஃபிரண்ட்ஷிப் & டிக்கிலோனா. *இர்ஃபான் பதான் – அஸ்லான் இல்மாஸ். *ஸ்ரீசாந்த் – காத்துவாக்குல ரெண்டு காதல். *கபில் தேவ் – லால் சலாம். இந்த வரிசையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

News July 7, 2025

இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது!

image

பொறியியல் கலந்தாய்வு இன்று(ஜூலை 7) தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான மாணவர்கள் இன்று பங்கேற்கின்றனர். காலை 10 மணி – மாலை 6 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். AI, Data Science, Computer Science உள்ளிட்ட பிரிவுகளில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கூடுதல் விவரங்களுக்கு <>www.tneaonline.org<<>> அணுகவும்.

News July 7, 2025

பக்தர்களின் பசியாற்ற தவமிருக்கும் தமிழழகன்

image

செந்திலாண்டவரின் பாதங்களில் உங்களின் கண்ணீரை வைக்க, அவர் உங்களுக்கு உப்புக்காற்றைக் கூட திகட்டவைக்கும்படி வாழ வைப்பார். அப்படிப்பட்ட திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள பல சிற்பங்களில் முனிவர்களின் சிற்பமும் உண்டு. முக்கியமாக, முனிவர்கள் அமர்ந்து சாப்பிடும் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இதனாலேயே இக்கோயிலில் 3 வேளையும் அன்னதானம் மூலமாக பசியாற்றுகிறார் என்னழகன் வேலவன்!

News July 7, 2025

நட்சத்திரங்களுக்கு மத்தியில்! சுபான்ஷூவின் வைரல் PHOTO!

image

41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்திய வீரர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். இது குறித்த போட்டோஸை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் இருக்கும் 7 ஜன்னல்களை கொண்ட Cupola Module-ல் இருந்து சுபான்ஷு சுக்லா பூமியை பார்க்கும் போட்டோஸ் நெட்டிசன்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ‘விண்வெளியில் விவசாயம்’ போன்ற ஆய்வுகளில் சுபான்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார்.

News July 7, 2025

இபிஎஸ் சுற்றுப்பயணம்.. போட்டோ எடுக்க தடை!

image

2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த பயணத்தின்போது, இபிஎஸ் உடன் புகைப்படம் எடுப்பவர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரையும் அவருடன் போட்டோ எடுக்க விட வேண்டாம் என உத்தரவு பறந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்க அதிமுக இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.

News July 7, 2025

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

image

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். தவெகவுக்கு தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உள்ளன.

News July 7, 2025

வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

image

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.

News July 7, 2025

ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1 லட்சம் செலவு

image

சுவற்றில் பெயிண்ட் அடித்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு நிறுவனம் அரசு கஜானாவிலே அடித்துள்ளது. ம.பி-ல் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1,06,984 செலவழிக்கப்பட்டதாம், மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் பொருத்தப்பட்டு பெயிண்ட் அடிக்க ₹2,31,685 செலவானதாம். இப்பணியில் 648 பேர் ஈடுபட்டதாக கூறி செலவுக்கான ரசீதையும் அரசுக்கு வழங்கியது சுதாகர் கன்ஸ்டரக்‌ஷன் எனும் நிறுவனம்.

News July 7, 2025

சீன அதிபர் ஜி ஜின் பிங் ஓய்வு?

image

சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தியா தவிர அனைத்து பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இப்படியான சூழலில் அவர் ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல்கள் அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

News July 7, 2025

இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

image

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!