India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SIR மூலமாக வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் சதியை முறியடிப்போம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக தோல்வி உறுதியானதால் SIR மூலம் உழைக்கும் மக்களின் வாக்குரிமையை பறிக்க திட்டமிடுகின்றனர். ஜனநாயகத்தை காக்க வரும் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளேன். இதில், அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் ➤முதலில் அதனை SWITCH OFF பண்ணுங்க. ➤சார்ஜரில் கனெக்ட் செய்யவேண்டாம். இப்படி செய்தால் ஷார்ட் சர்க்யூட்டாகி போனின் பாகங்கள் சேதமாகிவிடும். ➤மொபைலில் இருந்து சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்றுங்கள் ➤காயும் வரை போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இவற்றை செய்தால் தண்ணீரில் விழுந்த உங்கள் போனில் எந்த பிரச்னையும் வராமல் பாதுகாக்கலாம். SHARE.

ரத்த கசிவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயஸ் தனது உடல்நிலை குறித்து X-ல் பதிவிட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாகவும், தன்னுடைய உடல்நலனில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலக்கட்டத்தில் தன் மீது அனைவரும் காட்டிய அன்புக்கும், தனக்காக செய்த பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார், அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருதரப்பும் சீட் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில், செல்வகுமார் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, சீட் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ரஷ்யா சமீபத்தில் 2 அணுசக்தி ஆயுதங்களை சோதித்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகளை தொடங்குமாறு, USA போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிற நாடுகளின் அணு ஆயுத சோதனைகளால் தான் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், உலகின் வேறு எந்த நாட்டையும் விட USA-விடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சோதனைகளை நிறுத்திவிட்டு, உக்ரைன் போரை முடிக்குமாறும் புதினுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

SIR பணிகள் நவம்பரில் தொடங்க உள்ள நிலையில், அதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்து, நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பிஹார், மே.வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து, வேலை பார்ப்பவர்களுக்கு, TN-ன் அரசியல் சூழல் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபரணத் தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ₹1 குறைந்து ₹165-க்கும், கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹17,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

RRB மூலம் 3,058 NTPC Non Graduates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, சில பணிகளுக்கு டைப்பிஸ்ட் அவசியம். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: Commercial Cum Ticket Clerk – ₹21,700. இதர பணியிடங்களுக்கு ₹19,900 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <

தவெகவில் N.ஆனந்திடம் இருக்கும் அதிகாரத்தை பிரித்துக் கொடுப்பது என்கிற முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால், ஆனந்தின் ஆதரவு நிர்வாகிகள் மாற்றப்படலாம். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் பிரித்துக் கொடுக்கப்படலாம் என்கின்றனர். மேலும் கட்சியின் உள்கட்டமைப்பை மொத்தமாக மாற்ற விஜய் முடிவு செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர், டிசம்பரில் தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே ‘Montha’ புயல் உருவானது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகளால், எதிர்மறை நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனால், 2019-ம் ஆண்டு போல, பல தீவிர மற்றும் அதி தீவிர புயல்கள் உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.