news

News November 28, 2024

சென்னையிலிருந்து 490 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்

image

ஃபெங்கல் புயல் சின்னம் இன்று காலை 4 மணி நிலவரப்படி நாகைக்கு தென்கிழக்கே 320 கி.மீ, சென்னைக்கு தென்கிழக்கே 490 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சூறாவளி புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் IMD தெரிவித்துள்ளது. காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நவ.30ஆம் தேதி வலுவிழந்து கரையை கடக்கும் எனவும் IMD கணித்துள்ளது.

News November 28, 2024

சபரிமலை விரைவு ரயிலில் தீ விபத்து.. உயிர் தப்பிய பக்தர்கள்

image

திருப்பூர் அருகே சபரிமலை விரைவு ரயிலில் நேரிட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொல்லத்தில் இருந்து மசூலிப்பட்டினம் சென்ற அந்த ரயில், வஞ்சிப்பாளையத்தில் நேற்று காலை வந்தபோது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் தீப்பிடித்தது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News November 28, 2024

திமுக என்னை வெளியேற்றியது: வைகோ பரபரப்பு பேச்சு

image

எந்த இயக்கத்திற்காக உழைத்தேனோ, நேசித்தேனோ, அந்த இயக்கம் தன்னை வெளியேற்றியதாக கூறி வைகோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மதிமுக சார்பில் நடந்த மாவீரர் கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகள் DMKவில் பணியாற்றிய போது, 27 முறை சிறை சென்றதாக நினைவு கூர்ந்தார். மேலும், திமுக தலைவருக்காக உயிரையே தரத் தயாராக இருப்பதாக மேடைக்கு மேடை முழங்கியபோதும், அந்த இயக்கத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக ஆதங்கப்பட்டார்.

News November 28, 2024

CSK சீனிவாசன் மீது அதிர வைக்கும் புகார்

image

2ஆவது IPL சீசனின் போது CSK அணியின் இணை உரிமையாளர் சீனிவாசன், ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக IPL நிறுவனர் லலித் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். ஏலத்தின் போது Flintoff தனக்கு வேண்டும் என சீனிவாசன் கூறியதால், மற்ற அணிகள் அவரை எடுக்க வேண்டாம் என தான் கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சீனிவாசன் BCCI உறுப்பினராக இருந்தாா். மேலும், இந்த புகார் காரணமாக 2 சீசனில் விளையாட CSK-வுக்கு தடை விதிக்கப்பட்டது.

News November 28, 2024

ஜார்க்கண்ட் செல்கிறார் உதயநிதி

image

இன்று மாலை நடைபெறும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இவ்விழாவில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது.

News November 28, 2024

ரயில்வே சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

மாற்றுத்திறனாளி பயணியர் ரயில்வே சலுகை அடையாள அட்டையை எளிதாக பெற, புதிய இணையதள வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தேவையான சான்றிதழ்களை https://divyangjanid.indianrail.gov.in/ என்ற தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு, அடையாள அட்டை இணையதளம் வாயிலாக வழங்கப்படும். முன்னதாக, இதற்கு கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியதிருந்தது.

News November 28, 2024

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை: MET

image

காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற தகவலை வானிலை மையம் (MET) வெளியிட்டுள்ளது. அதில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், காரைக்கால், புதுச்சேரியிலும் மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.

News November 28, 2024

BREAKING: மதுரையில் புதிய மேம்பாலம் சரிந்து விபத்து!

image

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் இணைப்பு பாலத்திற்கான கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 28, 2024

காதலியை 40 துண்டுகளாக வெட்டி….

image

கசப்பு கடையில் பணியாற்றி வந்த ஜார்கண்ட்டை சேர்ந்த நரேஷ் என்பவர் தனது காதலிக்கு தெரியாமல், திருமணம் செய்துள்ளார். தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி காதலி நிர்பந்திக்க, காட்டு பகுதி ஒன்றிற்கு அவரை அழைத்து சென்று, கொன்று 40 துண்டுகளாக வெட்டி வீசிவிட்டு தப்பித்திருக்கிறார். தெருநாய் ஒன்று உடல் பாகத்துடன் சுற்றித்திரிய, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் நரேஷை கைது செய்துள்ளனர்.

News November 28, 2024

நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க தயாராகும் பிரியங்கா..!

image

மக்களவை எம்பியாக பிரியங்கா இன்று பதவியேற்க உள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் மெகா வெற்றி பெற்ற நிலையில், சகோதரர் ராகுல் காந்தி, தாய் சோனியா காந்தியுடன் இன்று முதன்முதலாக பார்லிமென்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார். இதன் மூலம், ராஜ்ய சபா, லோக் சபா என இரு அவைகளிலும் குறைந்தபட்சம் ஒரு குடும்ப உறுப்பினரைக் கொண்ட MP-க்கள் லிஸ்டில் பிரியங்காவும் இணைகிறார்.

error: Content is protected !!