news

News November 28, 2024

குரூப்-4 கவுன்சிலிங் எப்போது? – TNPSC அறிவிப்பு

image

குரூப்-4 கவுன்சிலிங் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடந்தது. இதனை 15.91 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 9,491-ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

நமது சந்ததிகள் செவ்வாய் கோளில் தான் வாழுமாம்..!

image

செவ்வாய் கோளில் மனித குடியேற்றத்தை நிகழ்த்துவது உறுதி என SpaceX CEO எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பூமியில் வாழ முடியாத சூழல் உருவாகும் போது, தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கைகொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, செவ்வாய் கோளில் முதலீடு செய்தால் எவ்வித பொருளாதார பலன்களையும் பெற முடியாது என விண்வெளி இயற்பியலாளர் டைசன், மஸ்கை விமர்சித்து இருந்தார்.

News November 28, 2024

நகராமல் நங்கூரமிட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புயலாக வலுவடையலாம் என வானிலை மையம் கணித்திருந்தது. மணிக்கு 10KM வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 3 KM ஆகக் குறைந்தது. தற்போது அதுவும் குறைந்து 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

News November 28, 2024

ஒரே நாளில் சர்ரென உயர்ந்த முருங்கைக்காய் விலை!!

image

தமிழகத்தில் காய்கறி விலையில் பெரும் தாக்கத்தை மழை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு முருங்கைக்காய் விலை ₹100 அதிகரித்துள்ளது. நேற்று வரை மொத்த விற்பனையில் கிலோ ₹250க்கு விற்பனையான முருங்கைக்காய், இன்று ₹350க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில், சில்லறை வணிகத்தில் கிலோ ₹380 வரையிலும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

‘குட் பேட் அக்லி’ வெறித்தனமா வரும் போலயே!

image

‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பில்லா, மங்காத்தா போன்று மிரட்டலான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தன் கெரியர் பெஸ்ட் BGM இப்படத்தில் இருக்கும் என ஜி.வி.பிரகாஷ்குமாரும் வெறி ஏற்றிவிட்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 28, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

மத்திய அரசின் கோல் இந்தியா (CIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 640 Management Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித்தகுதி: BE/ B.Tech/ B.Sc (Engg) With 60%. வயது வரம்பு: 21-30.ஊதியம்: ₹50,000 (1 வருட பயிற்சிக்கு பின் ₹ 1,60,000). தேர்வு முறை : கேட்-2024 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில். விண்ணப்பக் கட்டணம்: ₹1,180. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News November 28, 2024

டிசம்பர் 1ஆம் தேதி அண்ணாமலை RETURNS

image

அண்ணாமலை வரும் டிசம்பர் 1ஆம் தேதி தமிழகம் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு லண்டனுக்கு மேல் படிப்புக்காக அவர் ஆகஸ்ட் மாதம் சென்றார். அவருக்குப் பதிலாக பாஜக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுவே கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து நவ.30இல் அண்ணாமலை புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

News November 28, 2024

குரூப்-2 தேர்வு முடிவு எப்போது? – TNPSC முக்கிய அறிவிப்பு

image

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வின் ப்ரீலிம்ஸ் ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது. உதவி ஆய்வாளர், சார்-பதிவாளர் நிலை II, துணை வணிகவரி அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்.14இல் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. இதனை 5.81 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில், கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் 2,540-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

தமிழில் ஒரே படம் தான் ₹650 கோடி சொத்து, தனியார் ஜெட்….

image

இப்போது ஹாலிவுட்டில் முக்கிய நடிகை, ஆனால் இவரை அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா தான். அதுவும் தளபதி கூட. ஹிந்தியிலும் பெரிய ரவுண்ட் வந்த இவர், முன்னாள் உலக அழகியும் கூட. தன்னை விட 10 வயது குறைந்தவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு படத்துக்கு இப்போது ₹40 கோடி சம்பளம் வாங்குபவர், ₹650 கோடி சொத்து, தனியார் ஜெட் எல்லாம் வைத்துள்ளார். இன்னுமா இவர் யார் என்று தெரியல… கமெண்ட்ஸ்’ல பாருங்க

News November 28, 2024

நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம்; வீடு திரும்பும் மக்கள்!

image

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இஸ்ரேல் அமைச்சரவையில் 10 பேர் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக (எதிராக ஒருவர்) வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, 10-1 என்று பெரும்பான்மை அமைச்சர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர்.

error: Content is protected !!