news

News November 28, 2024

ICU-வில் EVKS இளங்கோவன்

image

EVKS இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதாகவும், திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டிச.9ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில், இளங்கோவன் உரையாற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

பாகிஸ்தானுக்கு கட்டாயம்; இந்தியாவுக்கு சலுகையா?

image

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், PAK அணி இனிமேல் இந்தியா செல்லாது என PCB தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணி PAK வர மறுப்பு தெரிவிக்கும்போது, PAK அணி மட்டும் ஏன் இந்தியா செல்ல வேண்டும்? ICC தலைவராக பதவியேற்ற பிறகு ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட்டின் நலன் குறித்து சிந்திப்பார் என்று அனைவரும் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

News November 28, 2024

மாணவர்களுக்கு இலவச லேப் டாப்பா? மத்திய அரசு பதில்

image

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச லேப் டாப் வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில், இலவச லேப் டாப் வழங்க இருப்பதாக வலைதளங்களில் வரும் செய்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளது. அதுபோல திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆதலால் அத்தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

News November 28, 2024

மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது

image

PM மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், மோடியை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், 34 வயது பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் PRANK செய்ய அவர் மிரட்டல் விடுத்ததும், கிரிமினல் பின்னணி இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

News November 28, 2024

நேரில் நலம் விசாரித்தார் CM ஸ்டாலின்

image

காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். நுரையீரல் சளி பிரச்னையால் ICUவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிகிச்சையில் உள்ள அவரை CM ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.

News November 28, 2024

DC ஓனரிடம் உருக்கமாக பேசிய கே.எல்.ராகுல்..!

image

DC நிர்வாகத்திடம் இருந்து மரியாதையையும், அன்பையும் கே.எல்.ராகுல் எதிர்பார்ப்பதாக அந்த அணியின் ஓனர் பார்த் ஜிண்டால் கூறியுள்ளார். மேலும், தானும், டெல்லியும் இதுவரை IPL கோப்பையை வெல்லவில்லை, இந்த முறை இருவரும் இணைந்து அதற்காக போராடலாம் என ராகுல் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராகுலிடம் பொதுவெளியில் கடுமையாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

இந்திய மக்களிடம் ரூ.193 லட்சம் கோடி மதிப்பு தங்கம்

image

இந்தியர்கள் தங்கள் வீடுகளில் ரூ.193 லட்சம் கோடி மதிப்புக்கு தங்க நகைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக தங்க மதிப்பீடு கவுன்சில் அறிக்கையில், இந்தியர்கள் 23,537 டன் தங்கம் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தங்கம் மீதான இந்தியர்களின் ஆசையையே அவர்கள் இருப்பு வைத்துள்ள தங்கத்தின் மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. நீங்க உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துள்ளீர்கள்? கீழே கமெண்ட்ஸ் பதிவிடுங்க.

News November 28, 2024

15 லட்சம் பேர் பலி.. எமனாக மாறும் காற்று மாசு..!

image

பருவநிலை மாறுபாடால் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இவை வளரும் நாடுகளையே அதிகம் பாதிப்பதும் தெரியவந்துள்ளது.

News November 28, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) தெற்கின் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது? 2) GCC என்பதன் விரிவாக்கம் என்ன? 3)இமயமலை தொடரின் நீளம் என்ன? 4) சமதளப் பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி எது? 5) தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன? 6) ‘அபிஞான சாகுந்தலம் ‘ நூலின் ஆசிரியர் யார்? 7) இலங்கையின் தேசிய மலர் எது? 8) சர்வதேச நாணய நிதியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 28, 2024

அடி மேல் அடி வாங்கும் RCB!!

image

கர்நாடகாவில் ஹிந்தி மொழிக்கு எதிராக கடும் எதிர்வினைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என RCBயை ரசிகர்கள் விமர்சிக்கும் சூழலில், மற்றுமொரு பிரச்னை வந்துள்ளது. அண்மையில் RCB அணி X தளத்தில் RCBhindi என்ற கணக்கை தொடங்கியது. இதற்கு கன்னட ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இருக்குற பிரச்னை பத்தாதுன்னு இது தேவையா?

error: Content is protected !!