news

News November 28, 2024

மின்கம்பி அறுந்து விழுகிறதா? இந்த நம்பரை அழையுங்க

image

புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றும், கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதில் மழை, பலத்த காற்றின்போது மின்கம்பி அறுந்து விழுந்தாலோ, மின்கம்பம் சாய்ந்து விழுந்தாலோ அருகில் செல்ல வேண்டாம் என்றும், உடனே 94987 94987 நம்பரை அழைக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

News November 28, 2024

‘ஸ்லம்டாக் மில்லியனர் 2’-க்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

image

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் 2ஆம் பாகம் மற்றும் டிவி உரிமையை லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிரிட்ஜ் 7’ கைப்பற்றியுள்ளது. ‘‘சில கதைகள் எப்போதும் நம் மனதில் தங்கும். அதில் ஒன்றுதான் இந்தபடம். இதன் கதையாடல் உலகளாவியது’’ என தயாரிப்பாளர்கள் ஸ்வாதி ஷெட்டி, கிரான்ட் கெஸ்மென் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள் உள்பட, 8 ஆஸ்கர் விருதுகளை இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

இந்தியாவிலேயே 2ஆவது அதிக IT வரி கட்டும் விஜய்

image

இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த பிரபலம்தான் 2ஆவது அதிக வருமான வரி கட்டுகிறார். அவர் யாரென தெரிய ஆவலா? தவெக தலைவரும், நடிகருமான விஜய்தான் அவர். 2024இல் மட்டும் அவர் ரூ.80 கோடி கட்டுவதாகக் கூறப்படுகிறது. அவரை விட கூடுதலாக ஷாருக்கான் மட்டுமே அதிக வரி செலுத்துகிறார். அவர் ரூ.92 கோடி வரி செலுத்துகிறார். இதை வைத்து பார்த்தால், வருமான வரியில் ரஜினி, கமலை விஜய் விஞ்சிவிட்டதாகக் கூறப்படுகிறது.

News November 28, 2024

BREAKING: 5 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் டிச.2 வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 28, 2024

Recipe: திண்டுக்கல் ஃபேமஸ் பால்பன் செய்வது எப்படி?

image

முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் மைதா மாவு (1 கப்), ஏலக்காய் தூள், தயிர் (1/4 கப்), சிட்டிகை பேக்கிங் சோடா, உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் மாவை சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிந்த பின் அதை சர்க்கரைப்பாகில் தோய்த்து எடுத்தால் சுவையான பால்பன் தயார்.

News November 28, 2024

வக்ஃபு மசோதா: அறிக்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

image

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

News November 28, 2024

பெரிய ஹீரோக்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ட சமந்தா!

image

IMDB-யின் இன்றைய வாரத்திற்கான டாப் இந்திய பிரபலங்கள் லிஸ்ட்டில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். உலகம் முழுவதும் 20 கோடி பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா -5, ராஷி கண்ணா 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். முன்னதாக, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘Citadel: Honey Bunny’ வெப்சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

BGT தொடர்: ஆஸி. அணிக்கு எச்சரிக்கை விடுத்த டிராவிட்

image

ஆஸி. அணிக்கு எதிரான BGT தொடரில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டியளித்த அவர், “சில மாதங்களுக்கு முன் SAஇல் விளையாடிய போது நன்றாக பேட்டிங் செய்தார். BGT தொடரின் முதல் போட்டி நடந்த கடினமான ஆடுகளத்திலும் அவர், சதமடித்தது நம்பிக்கை அளிக்கிறது. கோலியிடம் ஆஸி. அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

News November 28, 2024

சபாநாயகரை விடாமல் துரத்தும் அதிமுக

image

ஜெயலலிதா மறைந்த போது, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், அதிமுகவின் வழக்கு தள்ளுபடியானது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.

News November 28, 2024

MARKET CRASH: ₹4 லட்சம் கோடி இழப்பு!

image

காலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீடுகள், தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. Nifty 223 புள்ளிகள் சரிந்து 24,051 ஆகவும், SENSEX 783 புள்ளிகள் சரிந்து 79,450 ஆகவும் வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ₹4 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பணவீக்கம், பெடரல் வட்டி விகிதக் குறைப்பு & பங்குகளின் ஹெவிவெயிட் விற்பனை காரணங்களாக கூறப்படுகிறது.

error: Content is protected !!