India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலைமையின்கீழ் குண்டர்கள் செயல்படுவதாக AAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 1990களில் மும்பையில் நிலவிய நிழலுலக தாதாக்களின் ஆதிக்கத்தை போல, இப்போது டெல்லியிலும் குண்டர் ராஜ்ஜியம் நடக்கிறது. வணிகர்களை மிரட்டுவது, துப்பாக்கிச் சூடு & வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டிற்கு அமித்ஷாவே காரணம் என சாடினார்.
மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்துவது சரியல்ல என்று பாடகரும் நடிகருமான SPB சரண் தெரிவித்துள்ளார். தனது தந்தையும், பாடகருமான SPBஇன் குரலைப் பயன்படுத்த பலர் தன்னை அணுகியதாகக் கூறிய அவர், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றார். ஒரு பாடலைப் பாடுவது பாடகரின் விருப்பம் என்றும், நாம் விரும்பும் பாடல்களுக்கு இல்லாத ஒருவரின் குரலைப் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா, புதிய சாதனை ஒன்றின் விளிம்பில் உள்ளார். டிச.6ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்டில் அவர் 1 விக்கெட்டை வீழ்த்தினால், இந்த காலண்டர் ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். அவருக்கு அடுத்த இடத்தில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 50 விக்கெட்டுகளை எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் தேவை.
உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலியால் அவதியடைந்து வரும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. எனினும், சிகிச்சை முறை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பெரியாரிடம் இருந்த பகுத்தறிவையும், சுயமரியாதையும் உதயநிதியிடம் காண்பதாக அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம் தெரிவித்துள்ளார். அண்ணாவின் இருமொழிக் கொள்கையை மனதில் ஏற்று, இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஒரே தமிழக அமைச்சராக உதயநிதி உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். உதயநிதியின் உழைப்பால் திமுகவுக்கு மிகப் பெரிய இளைஞர் பட்டாளம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 வீரர்களை கொண்ட இந்த லிஸ்ட்டில், கடந்த முறையை விட ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிட்செல் மார்ஷ் காயத்தால் அவதிப்படும் நிலையில், புதுமுக ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளார். வரும் டிசம்பர் 6ஆம் தேதி போட்டி நடைபெற உள்ளது.
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்(OTA) கௌரவித்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில்தான் முகுந்த் வரதராஜன் தன்னுடைய ராணுவ வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தின் மதிப்புமிக்க Officers Training Academyல் தான் SSC அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ரயிலில் AC கோச்களில் வழங்கப்படும் பெட்ஷீட்கள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சுகாதாரம் பேண, போர்வைகள் எளிதாக துவைக்கும் வகையிலும், BIS தரநிலைகள் கொண்ட லினன் நூலினாலும் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், படுக்கை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் War room-கள் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விசாகப்பட்டினம் அருகே கடல் பகுதியில் இந்த சோதனையைக் கடற்படை உறுதி செய்துள்ளது. இது, ஐஎன்எஸ் அரிகாட்(INS Arighaat) நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 3,500 கி.மீ தூரம் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
1) தெற்கின் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு – நியூசிலாந்து 2) GCC – Global Capability Centers 3) இமயமலை தொடரின் நீளம் – 2,560 கி.மீ 4) சமதளப் பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி – Planimeter 5) தங்கத்தின் வேதியியலின் பெயர் – அயூரியம் 6) ‘அபிஞான சாகுந்தலம் ‘ நூலின் ஆசிரியர் – காளிதாசன் 7) இலங்கையின் தேசிய மலர் – நீலோற்பலம் 8) சர்வதேச நாணய நிதியம் 1944ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Sorry, no posts matched your criteria.