news

News January 1, 2026

போரில் வெற்றி பெறுவோம்: புடின்

image

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவே வெற்றிபெறும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர், உங்கள் மீதும் நம் வெற்றியின் மீதும் நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, 2026 டிச.31 உடன் ஆட்சி அதிகாரத்தில் புடின் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

News January 1, 2026

அப்துல்கலாம் பொன்மொழிகள்!

image

*கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும் *அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு *எல்லா பறவைகளும் மழைக்காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும் *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை

News January 1, 2026

காங்கிரஸுடன் கூட்டணியா? அருண்ராஜ் பதில்

image

அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தவெகவின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைத்து ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ், தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும், கூட்டணி அமைப்பு குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.

News January 1, 2026

SKY உடன் ரிலேசன்ஷிப்பில் இல்லை: நடிகை

image

சமீபத்தில் இந்திய டி20 கேப்டன் <<18713562>>SKY<<>> தனது மனைவியுடன் திருப்பதி சென்றிருந்த நிலையில், கடந்த காலங்களில் அவர் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருடன் ரொமாண்டிக் ரிலேசன்ஷிப்பில் இல்லை, நட்பு ரீதியாகத்தான் பேசிக்கொண்டு இருந்ததாக நடிகை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவருடன் பேசியே நீண்ட நாள்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

எல்லாரும் நல்லா இருப்போம்: விஜய்

image

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாவில், ‘ஜனநாயகன்’ போஸ்டரை பகிர்ந்து நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் என்றும் Happy New Year நண்பா நண்பி எனவும் விஜய் கூறியுள்ளார். அவருடைய பதிவிற்கு சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியது. 2026-ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும் என ரசிகர்களும் அவருக்கு கமெண்ட்ஸ்-ல் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

News January 1, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 567
▶குறள்:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
▶பொருள்: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

News January 1, 2026

10 மாவட்டங்களில் மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை TN-ல் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தஞ்சை, திருவாரூரில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து வீடு திரும்புவோர் பாதுகாப்பாக பயணிக்கவும். உங்க ஊரில் மழை பெய்கிறதா?

News January 1, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 1, 2026

2025-ன் முக்கிய நிகழ்வுகள் இவைதான்: கார்கே

image

2025-ல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலை திட்டம் பறிக்கப்பட்டது. *SIR மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. *மோடியின் நண்பர் டிரம்ப் இந்தியா மீது வரிவிதித்தார். *வேலைவாய்ப்பின்மை உச்சம். *SC, ST, OBC மீதான வன்முறை அதிகரிப்பு என அவர் பட்டியலிட்டுள்ளார்.

News January 1, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 1, மார்கழி 17 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

error: Content is protected !!