news

News April 25, 2025

‘கேம் சேஞ்சர்’ கதையை மாற்றி விட்டனர்: கார்த்திக் சுப்பராஜ்

image

‘கேம் சேஞ்சர்’ படத்திற்கான ஒன்-லைனை கார்த்திக் சுப்புராஜ் தான் ஷங்கருக்கு கொடுத்தார். ஆனால், அதில் நிறைய மாற்றங்கள் செய்து, கதையையே மாற்றிவிட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். சாதாரண IAS அதிகாரியாக ஹீரோ இருந்ததை, ஷங்கர் மிகவும் பிரமாண்டமாக மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ₹300 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ₹180 கோடியை வசூலித்தது மட்டுமில்லாமல் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.

News April 25, 2025

188 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

image

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்று அட்டாரி வாகா எல்லை வழியாக 188 பாகிஸ்தானியர்கள் வெளியேறியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானில் இருந்து 286 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார்.

News April 25, 2025

4 இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தொட்ட வெயில்

image

தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக சுட்டெரித்தது. கரூர் பரமத்தி & மதுரை ஏர்போர்ட்டில் வெப்பம் 40.5 டிகிரியாக பதிவானது. திருச்சியில் 40.1 & வேலூரில் 40 டிகிரி என வெப்பம் சுட்டெரித்தது. அடுத்தபடியாக, ஈரோடு 39.6 டிகிரி, சேலம் 39.5 டிகிரி, என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் வெயில் 37.3 டிகிரியாக ரெகார்ட் ஆனது.

News April 25, 2025

காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல்

image

ஸ்ரீநகர் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் ராகுல் தெரிவித்தார்.

News April 25, 2025

மன்னிப்பு கேட்கத் தயார்: S.Ve.சேகர்

image

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசிய விவகாரத்தில், S.Ve.சேகர் சரணடைய ஜூலை வரை அவகாசம் அளித்திருக்கிறது ஐகோர்ட். தண்டனையை எதிர்த்து அவர் அளித்த மேல் முறையீட்டு மனுவில், பத்திரிகையாளரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்ட கோர்ட், அவர் மன்னிப்பு கேட்க அவகாசம் அளித்திருக்கிறது. முன்னதாக, அவருக்கு 30 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2025

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

image

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயராஜ் குமார், பழனி ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாததால் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றப்பத்திரிகையுடன், சுமார் 500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு வழங்கவும் ஆணையிட்டார்.

News April 25, 2025

நாட்டை தலைநிமிரச் செய்தவர்: பிரதமர் மோடி இரங்கல்

image

நாட்டின் அறிவியல், கல்விப் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் என்று குறிப்பிட்டு இஸ்ரோ ex.தலைவர் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை, தன்னலமற்ற சேவையை நாடு என்றும் மறக்காது; இந்திய விண்வெளி அமைப்பை உலக அரங்கில் உயரச் செய்தவர் எனவும் புகழ்ந்த பிரதமர், அன்னாரின் குடும்பத்தினர், விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

இந்தியாதான் டார்கெட்.. ஆப்பிள் எடுத்த முடிவு

image

2026 இறுதிக்குள் அமெரிக்காவிற்கு தேவையான அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 6 கோடி ஐபோன்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஐபோன் உற்பத்திக்கு சீனாவையே நம்பி இருப்பதை குறைக்கவும், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை கருத்தில் கொண்டும் இம்முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

News April 25, 2025

தாக்குதல் நடந்த இடத்தில் வீரர்கள் இல்லாதது ஏன்?

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பைசரன் பள்ளத்தாக்கில் வழக்கமாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் போதுதான் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்துச் சென்றதால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

News April 25, 2025

ஸ்பெசல் கிளாஸா? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

image

பள்ளிகளுக்கு ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுமுறையிலும் சில தனியார் பள்ளிகள் ஸ்பெசல் கிளாஸ் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயில் கொளுத்தி வரும் நிலையிலும் ஸ்பெசல் கிளாஸா என மாணவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், விடுமுறையில் ஸ்பெசல் கிளாஸ் நடத்தக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!