India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணும் 2 சிறுவர்களும் ஒருவரே. தற்போது திரையுலகில் மிகவும் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்திய அளவில் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகர்களில் அவரும் ஒருவர். திரையில் அவர் பெயர் வந்தாலே அரங்கமே அதிரும். அவர் சொன்னால் எதையும் செய்யும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. யாரென கண்டுபிடித்தீர்களா? கண்டுபிடித்தீர்கள் எனில், அவர் பெயரை கீழே கமெண்ட்களில் பதிவிடுங்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற வாய்ப்பில்லை, தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. இருப்பினும், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கான Red Alert விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூருக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு காலையில் லீவ் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை 3 நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த மனுக்களுக்கு, ஒரு மாதத்துக்குள் தீர்வு காணும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இனி இவை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரிப்பதாக கனிமொழி MP தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், சாதி அமைப்பும், பெற்றோர்களின் தொழிலை பிள்ளைகள் ஏற்க வேண்டும் என்ற குலத்தொழில் முறையையும் அந்த திட்டம் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டினார். அதனால் தான் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது எனக்கூறி CM ஸ்டாலின் மிகத் தீவிரமாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவெக மாநாட்டுக்கு வரும் வழியில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்கினார் விஜய். அப்போது அவர்களிடம், மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால், இப்படியொரு சூழலில் சந்திக்க வேண்டியதாயிற்று எனக் கூறி விஜய் கண்கலங்கியுள்ளார். மேலும், என்ன தேவை இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் விஜய் கூறியதாக நிதியுதவி பெற்றவர்கள் கூறினர்.
இந்தியாவில் ஒரு ரயில் சகல வசதிகளுடன் இலவசமாக ஓடுகிறது என்று சொன்னால், யாராலும் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். அந்த ரயிலின் பெயர் பகாரா – நங்கல் ரயில். இமாச்சலில் உள்ள பகாரா – நங்கல் இடையேயான 12 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான சட்லெஜ் நதியையும், பசுமையான சிவாலிக் மலைகளையும் இந்த ரயில் கடந்து செல்கிறது. மற்ற ரயில்களை போல எல்லா வசதிகளும் இதிலும் உள்ளன.
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசர் இன்று இரவு 11:08 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட இது, தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கவுள்ளது. காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை மறுதினம் காலை (நவ.30) இது கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கரையை கடக்கையில் வட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு ப்ரோமோ படப்பிடிப்பு டிச.5 ஆம் தேதி சென்னையில் உள்ள ஈ.வி.பி அரங்கத்தில் செட் அமைத்து நடத்த உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ப்ரோமோ வீடியோவை ரஜினியின் பிறந்தநாளான டிச.12இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கிறிஸ்தவத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து தந்தைக்கும், கிறிஸ்துவ தாய்க்கும் பிறந்த செல்வராணி, SC ஒதுக்கீட்டில் அரசுக்கு பணிக்கு தேர்வான நிலையில், அவர் கிறிஸ்துவர் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தந்தையின் சாதி சான்றிதழ் வழங்கக்கோரிய அவரின் மனு தள்ளுபடி ஆனதை எதிர்த்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.