news

News November 29, 2024

₹1,000 கோடி பில் போடுவரா ‘மகாராஜா’..?

image

‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் 40,000 தியேட்டர்களில் இன்று ரிலீசாகியுள்ளது. முன்னதாக, அந்நாட்டில் சிறப்பு திரையிடலின் போது, மக்கள் கண்ணீர் விட்டும், வியந்தும் படத்தை ரசித்த வீடியோக்கள் வெளியாகின. அதே ரிசல்ட் இன்று சீனா முழுவதும் கிடைத்தால், மகாராஜாவின் மொத்த வசூல் ₹1,000 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், தமிழ் சினிமாவில் ₹1,000 கோடி வசூலித்த முதல் படமாக இது இருக்கும்.

News November 29, 2024

மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நேற்று அது வலுவிழந்து வந்த நிலையில் புயலாக மாறாது என எண்ணப்பட்டது. ஆனால், இன்று காலை அது மீண்டும் வலுப்பெற்று வருகிறது. இதனால், காற்றின் வேகம் அதிகரித்து, அது இன்று ஃபெங்கல் புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி.. டெல்லியில் முகாம்!

image

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர் இழுபறி நீடிக்கிறது. டெல்லியில் முகாமிட்டுள்ள ‘மகா யுதி’ தலைவர்கள் அமித் ஷா, நட்டா ஆகியோருடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். பாஜக தலைமையின் முடிவை ஏற்பதாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கூறினார். இதனால் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இழுபறி நீடிப்பது ஏன் என புரியாத புதிராக உள்ளது.

News November 29, 2024

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: பிரதமருக்கு கடிதம்

image

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சுரங்க உரிமை ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்றும், முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

News November 29, 2024

ரொமான்ஸில் சிக்ஸ் அடிக்கும் ரம்யா பாண்டியன்

image

மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், சமீபத்தில் யோகா மாஸ்டரான நபரானா லோவல் தவான் என்பவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்த்துக்கள் இந்த ஜோடிக்கு குவிந்த வரும் நிலையில், திருமணம் முடிந்த இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News November 29, 2024

சென்னைக்கு நாளை ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் நாளை (30.11.24) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

அரசு ஆம்புலன்ஸில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

image

ம.பி.யின் மௌகஞ்ச் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி, அரசு ஆம்புலன்சில் சிறுமியை (16) இருவர் கடத்தியுள்ளனர். அவரை ஓடும் வண்டியிலேயே பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் விட்டுவிட்டு தப்பித்துள்ளனர். இது குறித்து சிறுமி புகார் அளிக்கவே இச்சம்பவம் வெளியே வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி, அவரது நண்பர் ராஜேஷ் கேடவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News November 29, 2024

ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை

image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, அம்மாநில அரசு 18 – 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதல்வராக நேற்று பதவியேற்ற ஹேமந்த், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News November 29, 2024

தமிழகத்தில் புதிய ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு வாய்ப்பில்லை

image

மாநிலங்களவையில் நேற்று திமுக எம்.பி கனிமொழி சோமு, தமிழகத்திற்கு புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, புதிய ஸ்மார்ட் சிட்டிக்கு வாய்ப்பில்லை என மத்திய இணையமைச்சர் தோஹன் சாகு பதிலளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 97% முடிந்ததாகவும், 2025 மார்ச் மாதம் அவை முழுமையடையும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

News November 29, 2024

மாடியில் இருந்து விழுந்த B.Pharm மாணவி பலி.. நடந்தது என்ன?

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி விடுதியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், B.Pharm படித்து வந்த முதுகுளத்தூரை சேர்ந்த காவிய தர்ஷினி, 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!