India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சத்தீஸ்கரில் மாலைக்கு பதில் ஹெல்மெட் மாற்றி பிரேந்திர சாஹு- ஜோதி தம்பதியினர் திருமணம் செய்துள்ளனர். கடந்த 2022-ல் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தது மணமகனுக்கு தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தனது திருமணத்தின் மூலம் சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். முதலில் மோதிரம் மாற்றிக் கொண்ட தம்பதி, பின்னர் ஹெல்மெட் மாற்றிக் கொண்டு பந்தத்தை உறுதி செய்தனர்.
ஒரே இரவில் 90 ஏவுகணைகள், 100 ட்ரோன் தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் மின் ஆற்றல் கட்டமைப்பை ரஷ்யா சிதைத்துள்ளது. அதனால், இந்த பனிக்காலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர். 9 மணி நேரமாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா பனிக்காலத்தை ஆயுதமாக்குவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
7 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடிய இஷான் கிஷன், உருக்கமாக Good Bye போஸ்ட் போட்டுள்ளார். நல்ல மனிதனாகவும், ஒரு வீரனாகவும் தன்னை உருவாக்கியதோடு, மறக்க முடியாத நினைவுகளை MI பரிசளித்ததாகவும், இந்த MI, மும்பை, Paltan எப்போதும் தனது நெஞ்சில் நிறைந்திருக்கும் எனவும் அவர் கனத்த இதயத்துடன் விடைபெற்றுள்ளார். கிஷனை, SRH ₹10 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் முருகானந்தம், அவரது சகோதரர் அதிமுக நிர்வாகி பழனிவேல், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மற்றொரு நபர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் LED லைட், பிளிச்சிங் பவுடர் ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹57,280க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ₹7,160-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து 100 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி 1 கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் வலுப்பூரம்மன் கோயில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பல்லடம் அரசு ஹாஸ்பிட்டலுக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பணம், நகைக்காக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கோவையில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ₹2.5 லட்சத்தை நேர்மையாக போலீஸில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பும்போது நியூஸ் பேப்பர் பண்டலை கண்டெடுத்தார். அதில், இருந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த நிலையில், விசாரணைக்குப் பிறகு பணத்தைத் தவறவிட்ட காளிபாளையத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
வான் வெளியில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். டிரம்ப் தற்போது பாதுகாப்பாக இல்லை என்று தான் கருதுவதாகவும், தேர்தலுக்கு முன் அவர் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானது எனவும் கண்டித்துள்ளார். மேலும், அவர் புத்திசாலி என்றும், தான் சொல்வதை புரிந்துகொள்வார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.