India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தின் நலத்திட்டங்கள், பல மாநிலங்களுக்கும் உதாரணம். அப்படி, TN-ஐ போல கேரளாவிலும் மகளிருக்கு ₹1000 வழங்கப்படும் என CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத மகளிர், திருநங்கைகள் 31.34 லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையில்லாத அதிசய சிகிச்சையை US விஞ்ஞானி சென் சூ கண்டறிந்துள்ளார். பன்றி இதய திசுக்களில் ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், எதேச்சையாக Ultrasound-ன் துடிப்பினை மாற்றியபோது, திசுக்கள் நொறுங்கியுள்ளன. அவரின் இந்த தற்செயலே தற்போது ‘Histotripsy’ என்ற கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை முறையாக மாறியுள்ளது. தற்போது சிறுநீரகம், மார்பகம், மூளை புற்றுநோய்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் EPS மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். KAS, OPS ஒரே காரில் பயணித்தது தொடர்பான கேள்விக்கு, அது பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், தெரிந்ததும் பதில் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அங்கிருந்த பூசாரிகளை வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தேவர் நினைவிட பூசாரிகளை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தென்கொரியாவில் சந்தித்து பேசினார் அதிபர் டிரம்ப். அப்போது வரி விதிப்பு, வர்த்தகம், இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக சீனா மீதான இறக்குமதி வரியில் 10%-ஐ குறைத்துள்ளார் டிரம்ப். இந்த சந்திப்பு மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், அரிய மண் கனிமங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேவர் குருபூஜை நாளான இன்று அரசியல் ரீதியாக அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பசும்பொன்னில் EPS-க்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தனர். இச்சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே சீமானை தோளில் கைப்போட்டு வைகோ அழைத்து வந்தார். மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்தனர். தற்போது இருவரும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சீனாவும் USA-வும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் 2 நாடுகளுக்கிடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்புதான். இருந்தாலும் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், உலக அமைதி பற்றி டிரம்ப் அக்கறையுடன் உள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், CM ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற EPS-ன் கோரிக்கையை தானும் வழிமொழிவதாக குறிப்பிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவர் பெயரில் ₹3 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் CM ஸ்டாலின் அறிவித்தார்.

நம்மில் பலரும் சாப்பிட்ட உடன் பல வேலைகளை உடனடியாக செய்வோம். சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்று நினைத்து நாம் செய்யும் சில செயல்கள், உண்மையில் நமது செரிமான மண்டலத்தைப் பெரிதும் பாதித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடியவை என்பது பலருக்கு தெரிவதில்லை. அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள மேலே SWIPE பண்ணி பாருங்க…

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.