India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – அமைதி ➤ ரிஷபம் – நட்பு
➤மிதுனம் – புகழ் ➤கடகம் – சாந்தம்
➤சிம்மம் – கவனம் ➤கன்னி – பயம்
➤துலாம் – உதவி ➤விருச்சிகம் – லாபம்
➤தனுசு – வெற்றி ➤மகரம் – யோகம்
➤கும்பம் – செலவு ➤மீனம் – போட்டி.
ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்ப் பலி நடப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. முதலில் லாபம் கிடைப்பதை போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, பின்னர் நம் பணத்தை வாரி சுருட்டிவிடும். இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமையை விளக்கி, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. உ. பி.யில் நடைபெற்ற போட்டியில் TT அணியை 30 – 42 என்ற புள்ளி கணக்கில் HS அணி வீழ்த்தியது. அந்த அணி வீரர்கள் ஆல் அவுட் மூலம் 4 புள்ளிகள், எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் மூலம் 2 புள்ளிகள் பெற்றது வெற்றிக்கு வித்திட்டது. புள்ளி பட்டியலில் TT அணி 9ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபெஞ்சல் புயல் நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால் வட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும், அதிகனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலை.க்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நாளை (நவ.30) நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலை.யில் நாளை நடைபெறவிருந்த தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படம் இரண்டு எலிகள் சாதாரணமாக சண்டையிடுவது போல் தெரியும். ஆனால் இந்த புகைப்படம் தான் 2019ஆம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான LUMIX விருதை வென்றது. புகைப்படக் கலைஞர் சாம் ரவுலி லண்டனில் உள்ள சுரங்கப்பாதையில் எலிகள் சண்டையிடுவதை புகைப்படம் எடுத்தார். இப்போட்டியில் உலகளவில் இருந்து மொத்தம் 48,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சோதனை மேல் சோதனையாகவே உள்ளது. விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம், ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்ட மயோசிடிஸ் பாதிப்பு, அடுத்தடுத்த சர்ச்சைகள் எல்லாமும் அவரை மனம், உடல் ரீதியாக பலவீனப்படுத்தின. எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்தவருக்கு, தந்தையின் மரணம் பேரிழப்பாக அமைந்துவிட்டது. மனம் தளர வேண்டாம் சமந்தா! உறுதியாக மீண்டு வாருங்கள்!
8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேக் அப் செய்வது துன்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், அது தற்கொலைக்கு தூண்டக்கூடிய குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
ஃபெஞ்சல் புயல், நாளை கரையை கடக்கும் நிலையில், திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளில் மிதமானது முதல் அதிகமானது வரை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை EB வெளியிட்டுள்ளது. *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். *வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. *நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க கூடாது. *மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது.
Sorry, no posts matched your criteria.