India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி 2 பேர் பலியானதன் எதிரொலியாக, யானைகள் பராமரிப்பு தொடர்பாக கோயில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பக்தர்கள், மது அருந்தியவரை யானை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. செஃல்பி எடுக்க அனுமதிக்கக் கூடாது, தர்மம் பெற அழைத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அழைத்து செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஃபெஞ்சல்’ இன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் ஆணையம் எச்சரித்துள்ளது.
*1731 – பெய்ஜிங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 லட்சம் மக்கள் பலி. *1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின. *1872 – முதல் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது. *1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது. *1995 – வளைகுடா போர் முடிவு. *2000 – பிரியங்கா சோப்ரா உலக அழகி ஆனார். *2004 – பெண்களுக்கு 45% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது வங்கதேச நாடாளுமன்றம்.
மோடிக்கு ஆதரவாக 2014இல் பிரசாரம் செய்ததற்காக பிராயச்சித்தம் தேட உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மோடி பொய்யராக மாறிவிட்டதற்காக குற்றஞ்சாட்டிய அவர், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் 15 நாளில் திரும்ப கொண்டு வருவேன் எனக் கூறியதே அதற்கு உதாரணம் என்றார். சுப்பிரமணியன் சுவாமி கருத்து பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
*எதிர்காலத்தைக் கணிப்பதற்கான நம்பகமான வழி அதை உருவாக்குவதுதான். *கிட்டத்தட்ட எல்லா மனிதர்களாலும் துன்பத்தைத் தாங்க முடியும், ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் குணத்தை மதிப்பிட விரும்பினால், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள். *எதிர்ப்பது உங்கள் கடமையாக இருக்கும்போது அமைதியாக இருப்பது பாவச்செயலாகும். *மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
கனிமங்கள் நீங்கலாக சுத்திகரிக்கப்பட்ட ‘RO மினரல் வாட்டர்’ என்பது 100% கேடானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். குடிநீரை சுத்திகரிக்கும்போது, அதில் உள்ள கனிமங்கள், தாதுக்கள் இழக்கப்படுகின்றன. இதனால் நீரில் உள்ள சத்துகள் குறைகின்றன. தாகத்தை மட்டுமே தணிக்கும் இந்த நீரை பருகுவோருக்கு எலும்பு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே கனிமங்கள் நீக்கப்படாத ரீ-மினரலைசர் RO நீரை பருகுங்கள் என்கின்றனர்.
மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளிய வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் தமிழக பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட யாரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை வழக்குகளில் ₹1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 114 ▶குறள்: தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். ▶பொருள்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
பாம்பன் பாலம் தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். வெள்ளையர்கள் கட்டிய பாலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் போது, புதிய பாலம் திறப்பதற்கு முன்பே ஆடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ரயில் போகத்தான் பாலமே தவிர மக்களின் உயிர் போவதற்கு அல்ல என்ற அவர், பாலம் தொடர்பாக மக்களின் சந்தேகத்தை அரசு போக்க வேண்டும் என்றார்.
விஜய் சேதுபதி, நிதிலன் சுவாமிநாதன் கூட்டணியில் தமிழில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் இன்று வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சீன மொழியில் வெளியான ‘மகாராஜா’ படம் பெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் சாதிப்பாரா மகாராஜா?
Sorry, no posts matched your criteria.