news

News November 30, 2024

ஃபெஞ்சல் Effect: எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

image

* கரண்ட் கட் சகஜம் என்பதால், மெழுகுவர்த்தி, பேட்டரி லைட்களை வைத்திருக்கவும் * நனைந்தாலும் எளிதில் உலரக்கூடிய துணிகளை உடுத்துங்கள் * சேமியா, ரவை உப்புமா போன்ற லைட் டிபன்களை சாப்பிடவும் * கையில் பணம் இருக்கட்டும், ATM – UPIயை நம்பியிருக்க வேண்டாம் * தேவையற்ற மின் சாதனங்களை அணைத்து வைக்கவும் * டூ வீலர், கார்களை மேடான இடத்தில் நிறுத்தி வையுங்கள் * வெளியில் அடிக்கடி செல்வதை தவிர்ப்பது நல்லது.

News November 30, 2024

புயல் கரையை கடப்பதில் தாமதம்

image

ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால், புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீட்டராக குறைந்திருப்பதால் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அவர்களின் கணிப்புப்படி நாளை அதிகாலை மரக்காணம் அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கக்கூடும்.

News November 30, 2024

இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

image

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

News November 30, 2024

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ. மழைக்கு மேல் பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி மாநிலத்துக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

போலீஸுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவு

image

அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை இலவசமாக பயணம் செய்வதற்கான ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிவித்தார். இதற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பிக்கள், போலீஸ் கமிஷனர்கள் நடவடிக்கை எடுக்க டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

News November 30, 2024

இன்னும் 102 ரன்களே…World Record படைப்பாரா கோலி?

image

BGT தொடரின் 2-வது டெஸ்ட் நடக்கும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கோலி அரிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மைதானத்தில் இன்னும் 102 ரன்களை எடுத்தால், அதிக ரன்கள் எடுத்த ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை கோலி முறியடிப்பார். லாரா 611 ரன்களும், விவி ரிச்சர்ட்ஸ் 552 ரன்களும் எடுத்து முதல் 2 இடங்களில் உள்ளனர். இம்மைதானத்தில் 509 ரன்கள் அடித்துள்ள கோலியின் சராசரி 60க்கு மேல் உள்ளது.

News November 30, 2024

இன்று 9 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று 9 மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

News November 30, 2024

ஃபெஞ்சல் புயல் இப்போ எங்க இருக்கு!

image

புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 70 – 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடையிடையே 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 30, 2024

குற்றவாளியைப் பிடித்தால் ₹1 சன்மானம்

image

ம.பி. இந்தூரில் தேடப்படும் குற்றவாளியைப் பிடித்து தருபவர்களுக்கு ₹1 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. தப்ரேஸ் அலி, சௌரப் ஆகியோரைப் பிடித்தால் தலா ₹1 சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவாதத்தை தூண்டியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தானில் ஒரு குற்றவாளியை பிடிக்க 25 பைசா சன்மானம் அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளின் மதிப்பைக் காட்டுவதற்காக போலீசார் இந்த வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

News November 30, 2024

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் டீ!

image

மஞ்சள் டீ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் வருவதைத் தடுக்கும், இதய நோய்களில் இருந்து காக்கும், கல்லீரல் பாதிப்புகளை தடுக்கும் என்கிறார்கள். 2 கப் நீரை கொதிக்க வைக்கவும். ஒன்று அல்லது 2 ஸ்பூன் மஞ்சள் தூளை அதில் சேர்க்கவும். சிறிது நேரம் மிதமான தீயில் சூடுபடுத்தவும். பிறகு 5 நிமிடங்கள் ஆறவிட்டு, தேவையான அளவில் தேன் கலந்தால் மஞ்சள் டீ ரெடி.

error: Content is protected !!