news

News November 30, 2024

Marriage Functionல் புது Culture: Detox bar பாத்துருக்கீங்களா?

image

திருமணங்களில் Bachelor பார்ட்டி சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால், யாரும் ஹேங்கொவரில் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக, Wedding Planners Detox bar, IV drips போன்றவற்றை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். Detox bar புத்துணர்ச்சியூட்டும் பானங்களை குறிக்கிறது. IV drips, Vitamins, Minerals உள்ளடக்கிய உடல் சத்துக்காக எடுத்துக் கொள்ளும் Anti-oxidants ஆகும். காசு இருக்குறவனுக்கு புது புது ஐடியா!!

News November 30, 2024

சென்னையை குறிவைக்கும் மழை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நகரை சுற்றியே அதீத மழை பெய்துள்ளது. எண்ணூரில் 13 செ.மீ., கத்திவாக்கம் 12 செ.மீ., திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், பேசின் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ., பொன்னேரி, மணலி, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ., அடையாறு, ஆலந்தூர், நந்தனம், வடபழனி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News November 30, 2024

நாட்டின் GDP வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பு

image

GDP வீழ்ச்சியால் நாட்டில் வேலைவாய்ப்பு குறைத்து வேலையின்மை அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (GDP) ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 5.4% வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இந்தியப் பங்குச்சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

குரூப் 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியிட்டது TNPSC

image

குரூப் 1 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு எழுதுவோருக்கான ஹால் டிக்கெட்டை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை TNPSC கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து வருகிற டிச.10 முதல் டிச.13 வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்தோர் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கான ஹால் டிக்கெட் <>www.tnpsc.gov.in<<>> இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News November 30, 2024

47 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் புயல்

image

ஃபெஞ்சல் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்து அடுத்த 2 நாள்கள் மேற்கு நோக்கி நகர இருக்கிறது. அப்போது, அது திருவண்ணாமலை, சேலம், கோவை மாவட்டங்களை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், 47 ஆண்டுகளுக்குப் பின் கோவை எதிர்கொள்ளும் புயல் இதுவாகத்தான் இருக்கும். இதனால், கொங்கு மண்டலத்தில் சுமார் 20 செ.மீ. வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

News November 30, 2024

சென்னை விமான நிலையம் மூடல்

image

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5 மணி வரை எந்த விமானமும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதோடு, தொடர் கனமழை பெய்து வருவதால், பல நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்துள்ளன. மழைப்பொழிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

News November 30, 2024

நாளை முதல் OTP வருவதில் பிரச்னை ஏற்படுமா?

image

வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் என ஒரு மெசேஜ் எங்கிருந்து, யாரால் அனுப்பப்படுகிறது என்பதை டிராக் செய்யும் வசதியை ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அமல்படுத்த இன்றே கடைசி நாளாகும். இதை மீறும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு OTP பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் Spam மோசடிகளை தடுக்க மேற்கொள்ளும் இந்நடவடிக்கையால், நாளை முதல் OTP பெறுவதில் சிக்கல் ஏற்படாது என TRAI உறுதிபடுத்தியுள்ளது.

News November 30, 2024

மனைவிக்கு நகை வாங்கியதால் ₹8 கோடி பரிசு!!

image

அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் அடிக்கும் என்பது தெரியாத ஒன்றே. மனைவிக்காக நகை வாங்கிய ஒருவருக்கு இந்திய மதிப்பில் ₹8 கோடி ரூபாய் பரிசாக லக்கி டிராவில் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்க்க இவ்வாறு செய்யப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிதம்பரம் 3 மாதங்களுக்கு முன்பு, இக்கடையில் மனைவிக்கு தங்க செயின் வாங்க இம்முறை அவருக்கு பரிசு கிடைத்துள்ளது.

News November 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

News November 30, 2024

விஜய் மகனை புகழ்ந்து தள்ளிய சந்தீப் கிஷன்

image

ஜேசன் சஞ்சய் கதை சொல்ல வந்த போது, அவரது பணிவு மற்றும் திரைக்கதைக்காக அவர் மேற்கொண்ட உழைப்பை பார்த்து பிரமித்ததாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். சிங்கிள் பிரேக் கூட எடுக்காமல் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஒவ்வொரு ஃப்ரேமாக அவர் கதை சொன்னதாகவும், அதை கேட்டவுடன் OK சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும், ‘ராயன்’ ரிலீசாவதற்கு முன்பே, அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!