India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையின் பல இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல், நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை கவனத்தில் காெண்டு, வங்கித் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் IIB&F அமைப்பு அறிவித்துள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க TN அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிக்கும் அரசு அனுமதியளிக்காது எனவும் விளக்கமளித்தார். சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி CM கடிதம் எழுதியுள்ளதாகவும், இத்திட்டம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை (CT) தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு ICC எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பதால் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கும்படி ICC கேட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ஹைபிரிட் மாடலை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது.
‘புஷ்பா 2 தி ரூல்’ வரும் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், ‘புஷ்பா படத்தின் மீது அவர் வைத்த காதலுக்காகவும், இயக்குனர் சுகுமார் மீது கொண்ட அன்புக்காகவும்தான் வில்லனாக நடிக்க ஃபகத் ஒப்புக்கொண்டார். நன்றி, என் அன்பான ஃபகத் பாசில், நன்றி என் சகோதரரே’ என்றார்.
நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 9 முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ORS கரைசல், நிலவேம்பு குடிநீர், காய்ச்சல், சளி, சேற்றுப்புண் மருந்துகளை தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, சென்னையின் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் திண்டாடி வரும் சூழலில், நகரின் பல பகுதிகளில் “Monsoon is where, CM son is there” என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது தான் அடிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்குள் எங்கிருந்துதான் அடித்தார்கள். இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
சென்னையில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை மழையை வைத்து ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது. சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பேனரை சுட்டிக்காட்டி, எனக்கு நீச்சல் தெரியாது என வெளிமாவட்ட மக்கள் கூறுவது போல் அந்த மீம்ஸ் இடம்பெற்றுள்ளது.
அல்லு அர்ஜூன், பகத் பாசில், ரஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஆந்திராவில் முதல்நாள் நள்ளிரவு காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ₹500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
டெட் தேர்வில் தேர்ச்சியடைந்த ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது என்றார். மேலும், பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, CM ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.
UAEஇல் நடைபெற்று வரும் PAK அணிக்கு எதிரான U19 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 13வயது IND வீரர் வைபவ் சூர்யவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அலி ராசா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் RR அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டதால், அவரின் அதிரடி ஆட்டத்தைக் காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வரை 22 ஓவர்களில் IND 84/4 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.