India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை இரவுக்குள் அகற்ற பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா மருத்துவமனை ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்து துறவி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜே.என். ரே ஹாஸ்பிட்டல், வங்கதேச நோயாளிகளை இனி அனுமதிக்க மாட்டோம் என தடாலடியாக அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கான சிகிச்சையை இத்துடன் நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 115 ▶குறள்: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. ▶பொருள்: ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணிவரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என IMD தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஃபெஞ்சல் புயல் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி, இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளாக முழுமையாக கரையை கடந்தது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி, அடுத்து பகல் இரவு ஆட்டமாக அடிலெய்டில் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி PINK நிற பந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இதே மைதானத்தில் 2 அணிகளும் PINK பந்து டெஸ்ட் போட்டியில் 2020ஆம் ஆண்டில் மோதியுள்ளன. அதில் இந்தியா மிகவும் குறைவாக 36 ரன்களில் ஆட்டமிழந்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகு சொந்த ஊர் சென்றுள்ள அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
▶டிச.01 ▶கார்த்திகை – 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4.30 PM – 06.00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶நட்சத்திரம்: அனுஷம் ம 3.23
இன்று (டிச.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
19 கிலோ எடை கொண்ட வர்த்தக உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1964.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ.16 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 1இல் (ரூ.1,924.50) இருந்து இதுவரை ரூ.56 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.