India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பான் கார்டுகளை டிஜிட்டல்மயமாக்கும் PAN 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், தங்கள் பிஃஎப் பங்களிப்பை உயர்த்திக் கொள்ளலாம். மேலும், 2025-ம் ஆண்டிலிருந்து நேரடியாக ஏடிஎம்-இலிருந்தே பிஃஎப். பணத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் சென்று அரசு வழங்குமாறும், பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த நிவாரணத் தொகையே வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய ஆயுதப் படையில் 389 காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள், தச்சர், ஆபீஸ் அசிஸ்டென்ட், டிரைவர், பெயிண்டர் போன்றவை ஆகும். SC பிரிவினருக்கு 58, ST பிரிவினருக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் பல்வேறு மாநிலங்களில் அமர்த்தப்படுவர். <
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய PM 11 அணியினர் 240 ரன்கள் எடுத்துள்ளனர். 50 ஓவர்களை கொண்ட போட்டி மழை காரணமாக 46 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அபாரமாக விளையாடிய கோன்ஸ்டாஸ் 107 ரன்கள் குவித்தார். இந்தியாவின் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 241 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கவுள்ளது.
மழை பாதிப்பு குறித்த ஆய்வு, மீட்புப் பணிக்காக DCM உதயநிதி, மூத்த அமைச்சர்கள் விழுப்புரம் விரைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல், மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், மயிலம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, கடலூரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பதி திருமலையில் அரசியல் பிரசாரம், பேட்டிகளுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, MLA உள்ளிட்டோரின் ரீல்ஸ்களால் சர்ச்சை உருவானதாகவும், ஆதலால் திருமலையின் புனிதத்தை காக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது மகனுக்கு அஹான் சர்மா என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ரித்திகா இன்ஸ்டா பதிவில், டிசம்பர் மாதம் வந்துவிட்டதாகக் கூறி, கிறிஸ்துமஸ் சாண்டா கெட்டப்பில் ஃபேமிலியாக பொம்மைகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு பொம்மையிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவ.15ம் தேதி இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி இந்திரகுமார், ‘‘பிரிட்டிஷ் ஆட்சியில் பெங்களூருவில் தமிழர்கள் அடிமையாக இருந்தனர். கன்னடர்கள் அப்படி இல்லை’’ என பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தியுள்ளார். நீதிபதியின் பேச்சுக்கு தமிழக அரசு எதிர்வினை ஆற்றாதது ஏன்? அரசின் நிலைப்பாடு என்ன எனவும், கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைத்தது போல் நீதிபதிக்கும் அமைக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 ஆண்டுகளில் நக்சல் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று டிஜிபிக்களுக்கு PM மோடி உத்தரவிட்டுள்ளார். புவனேசுவரத்தில் 59ஆவது டிஜிபிக்கள், ஐஜி-க்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அவர், நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், 2026க்குள் நக்சல் தீவிரவாதத்தை முழுவதும் அழிக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். நேற்று நடைபெற்ற NZ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அதாவது, டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அவர் மொத்தம் 1630 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதன்மூலம், 1625 ரன்கள் எடுத்திருந்த சச்சினின் சாதனையை ரூட் முறியடித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.