news

News December 1, 2024

ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையைக் கடந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. கடலூரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் தற்போது அது நிலை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News December 1, 2024

இனி ஒரு மாசம் இல்ல.. 15 நாள்கள் தான்..!

image

ரயில்களில் AC கோச்களில் வழங்கப்படும் போர்வைகள் 15 நாள்களுக்கு ஒரு முறை துவைக்கப்பட உள்ளதாக வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்து இருந்தார். இது ரயில்வேயின் சுத்தம் மற்றும் பயணிகளின் சுகாதாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியது. இதனால் பயணிகள் பலரும் தங்கள் மனக்குமுறல்களை கமெண்ட்களாக பதிவிட்டனர்.

News December 1, 2024

பொறுப்பேற்றதும் ஆக்‌ஷனில் இறங்கிய ஜெய் ஷா

image

ICC தலைவராக ஜெய் ஷா இன்று பொறுப்பேற்றார். 2028 லாஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் முதன் முதலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராவதுதான் ICC தலைவராக தன் முன் இருக்கும் முதல் பணி என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் ICC இருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த 3 ஆண்டுகள் அவர் ஐசிசியை வழிநடத்த உள்ளார்.

News December 1, 2024

விஜய்யை விமர்சித்த அண்ணாமலை

image

அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுவதாகவும், புதிதாக ஒன்றும் பேசவில்லை எனவும் கூறிய அவர், அக்டோபர் மாதத்திற்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்தார் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 1, 2024

நாளை முதல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000

image

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 மற்றும் ஒருமுறை ரூ.6,000 வழங்கும் INTERNSHIP திட்டத்தை PM மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தை 2024-25 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் முதல் தொடங்கி நடைபெற்றது. இதற்கு சுமார் 4.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத் திட்டத்தின்கீழ் முன்னணி தனியார் நிறுவனங்களில் INTERNSHIP அளிக்கப்படும்.

News December 1, 2024

2026 தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை

image

2026 சட்டப்பேரவைத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். லண்டனில் மேல்படிப்புக்கு சென்ற அவர், இன்று சென்னை திரும்பினார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும், ஆம் ஆத்மியும் வித்தியாசமான அரசியல் பாதையில் பயணிப்பதாக சாடினார். தமிழகத்தை ஆளும் திமுக அரசு நல்லது செய்தால் பாஜக நிச்சயம் வரவேற்கும் என்றும் அவர் கூறினார்.

News December 1, 2024

உலக சாம்பியனுக்கு டஃப் கொடுக்கும் குகேஷ்!

image

சிங்கப்பூரில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கடும் போட்டியாக உள்ளார். நேற்று நடந்த 5வது சுற்று டிராவில் முடிந்தது. 4 சுற்றுகளின் முடிவுகளில் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டு ரூ.21 கோடி பரிசு வழங்கப்படவுள்ளது.

News December 1, 2024

நீங்க எப்பவாவது இத பாத்து இருக்கீங்களா..?

image

உலகில் உள்ள பல ஹோட்டல்கள் 13ஆம் நம்பரை பார்த்து பயப்படுவது ஏன் உங்களுக்கு தெரியுமா? மேற்கு உலக கலாசாரத்தில் கெட்ட சகுணத்தின் அறிகுறியாகவும், அமானுஷ்யத்தின் எண்ணாகவும் இதனைக் கருதுகின்றனர். இதன் காரணமாகவே 13ஆம் நம்பர் அறைகள் பெரும்பாலான ஹோட்டல்களில் இருப்பதில்லை. மேலும், 12ஆவது தளத்துடனே ஹோட்டல்கள் கட்டுமானத்தை நிறுத்திவிடுகின்றன. இந்த நம்பர் மீதான பயத்தை TRISKAIDEKAPHOBIA என அழைக்கின்றனர்.

News December 1, 2024

இப்படியெல்லாமா சாவு வரும்..?

image

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மரணம் ஏற்படும். ஆனால் ஓடும் பேருந்தில் புகையிலையை துப்ப முயன்றபோது ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை. உ.பியைச் சேர்ந்த ராம் ஜியாவன் (65), புகையிலை போட்டுக் கொண்டு AC பேருந்தில் சென்றுள்ளார். அதில் ஜன்னலை திறக்க முடியாது என்பதால், கதவை திறந்து துப்ப முயன்ற போது தவறி விழுந்து பலியானார். புகையிலையை யூஸ் பண்ணா சாவு உறுதி என்பதையே இது உணர்த்துகிறது.

News December 1, 2024

5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை

image

5 மாவட்டங்களுக்கு நாளை மிகக்கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!