India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கிடையே பேரணியில் பேசிய அவர், வயநாடு மக்களின் அன்பு மற்றும் ஆதரவுக்காக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்தார். இந்த தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
புதுச்சேரியில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கால் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை அங்கு விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் பாஜக பல முயற்சி மேற்கொண்டிருப்பதாக விமர்சித்தார். வெறுப்புணர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாகவும், இதில் வெற்றி பெற அரசியல் அதிகாரம் அவசியம் என்றும் கூறினார்.
மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ-மாணவியர் தமிழ் வாழ்த்து பாடினர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டனர். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.
AUS PM 11 அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஓபனிங் இறங்காதது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. AUSக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோஹித் இல்லாததால், ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஓபனிங் களமிறங்கினர். ஆனால், தற்போது ரோஹித் இருந்தும், அவர்களே களமிறங்கியுள்ளனர். முதல் போட்டியில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில், அதையே 2வது போட்டியிலும் மெயின்டெய்ன் செய்யும் எனக் கருதப்படுகிறது.
3 மாவட்டங்களுக்கு மாலை 6 மணி வரை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் மாலை 6 மணி வரை அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், நாகை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் டெல்லி தேர்தலில் எந்த கட்சியுடனும் ஆம் ஆத்மி கூட்டணி வைக்காது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணியை கர்நாடகா வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய தமிழகம், கர்நாடக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 90 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 24 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய கர்நாடக அணி, 11.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஓட்டப் பயிற்சியின்போது பள்ளி மாணவன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலிகார் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 14 வயதான மொஹித் சவுத்ரி, விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தான். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்ட நடிகர்கள் பலர் இருந்தாலும் S.J.சூர்யா அதில் தனி ரகம். இயக்குநர், கதாநாயகன், குணச்சித்திர நடிகன் என தனது அசாத்திய திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இந்நிலையில், இவரது கலைத் திறமையை பாராட்டும் விதமாக, வேல்ஸ் யுனிவர்சிட்டி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சூர்யாவுக்கு பட்டத்தை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.