India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நமது போராட்டம் நாட்டின் ஆன்மாவுக்கானது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். வயநாடு மானந்தவாடி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் கட்டமைப்பை அழிக்கும் சக்திக்கு எதிராகவும், மக்களின் தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் என்றும் தோளோடு தோள் நின்று போராடுவேன் என உறுதி அளித்தார். வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
விமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரமசிவன் பாத்திமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் சாயாதேவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் தலைப்பை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், திடீரென திசை மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தி.மலை, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி வழியாக மைசூருக்கு சென்று கொண்டிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அணியை கண்டு ஆஸி. வீரர்கள் பயப்படவில்லை என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து கூறியுள்ளார். எவ்வித பதற்றமும் இன்றி 2ஆவது டெஸ்டில் ஆஸி. அணி சிறப்பாக விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஒவ்வொரு இந்திய வீரர்களையும் வீழ்த்த தனி திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதை முன்பே கூற முடியாது என்றும், களத்தில் அது எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
புயல், மழை பாதிப்புகளை சுட்டிக்காட்டி அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தூங்கி வழிந்த நிர்வாகத்தால் மழைக்காலம் என்றாலே சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த காலம் ஒன்று இருந்தது. அது அதிமுக ஆட்சிக்காலம். ஆனால், இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு ஒரே இரவில் இயல்பு நிலை திரும்பும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்பிய <<14760713>>அண்ணாமலை <<>>நிருபர்களை சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஏதோ தியாகி போல திமுக கொண்டாடுவதாக விமர்சித்தார். மேலும், செந்தில்பாலாஜி என்ன நாட்டுக்காக பாடுபட்ட காந்தி மகானா என கேள்வியெழுப்பிய அவர், ஊழல் மலிந்த திமுக இதை செய்வது ஆச்சரியமில்லை என்றும் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக பல செல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பலருக்கு செல்போனில் சிக்னல் கிடைக்காத நிலை உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் INTRA CIRCLE ROAMING வசதியை செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ROAMING-ஐ ஆன் செய்தாலே, சிக்னல் இல்லாவிட்டாலும் பேச முடியும்.
நடிகர் அஜித்குமார் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்து வரும் அஜித், அதற்கு மத்தியில் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக பார்சிலோனாவில் தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, அவர் தனது எடையை 8 கிலோ வரை குறைத்துள்ளார். இது தொடர்பான போட்டோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.