news

News December 1, 2024

நாளை தேர்வுகள் ஒத்திவைப்பு!

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும், பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பல்கலைக்கழங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

News December 1, 2024

BIG BREAKING: 9 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 1, 2024

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்வு

image

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பில், மத்திய ஜிஎஸ்டி மூலம் ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி மூலம் ரூ.43,047 கோடி வசூலாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், IGST மூலம் ரூ.91,828 காேடி, செஸ் மூலம் ரூ.13,253 கோடி வசூலாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் 8.5% உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News December 1, 2024

8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 1, 2024

விழுப்புரம் விரைகிறார் ஸ்டாலின்..!

image

ஃபெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம்தான் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்வர் ஸ்டாலின், நாளை விழுப்புரம் செல்லவுள்ளார். முன்னதாக, இன்று இபிஎஸ் விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2024

புதிய சாதனை படைத்த இங்கிலாந்து

image

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிக ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. நியூசி.க்கு எதிராக அந்த அணி இந்த சாதனையை படைத்துள்ளது. முதலில் களமிறங்கிய நியூசி. இரு இன்னிங்சிலும் முறையே (348 & 254) ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் 499 ரன்கள் எடுத்த ENG அணி, 104 ரன்கள் டார்கெட்டை 12.4 ஓவர்களில் கடந்து, இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

News December 1, 2024

அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

News December 1, 2024

5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 1, 2024

ஆமை வேகத்தில் திமுக அரசு.. இபிஸ் குற்றச்சாட்டு

image

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.மேலும், பல விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததால், கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

News December 1, 2024

இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

image

ஆஸ்திரேலிய Prime Minister’s XI அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணி தரப்பில் கில் 50, நிதிஷ், வாசிங்டன் சுந்தர் தலா 42 ரன்கள் குவித்தனர்.

error: Content is protected !!