news

News October 30, 2025

இனி True Caller வேண்டாம்… வருகிறது அரசின் Caller Id…

image

செல்போன் பயனர்களுக்கு SPAM மற்றும் மோசடி அழைப்புகள் பெரிய தொல்லையாக உள்ளது. எனவே, யார் அழைக்கிறார்கள் என அறிய True Caller போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், இனி அதன் தேவை இருக்காது. காரணம், TRAI மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், Save செய்யாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால், சிம் பதிவுசெய்யப்பட்ட பெயர் திரையில் காண்பிக்கப்படும்.

News October 30, 2025

முடிவுக்கு வந்தது வைகோ – சீமான் சண்டை

image

TN அரசியலில் சீமானுக்கும் வைகோவுக்கும் மோதல் இருப்பதாக அவ்வப்போது பேசப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தில் ஒன்றாக பேட்டியளித்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது. தேவருக்கு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த சீமான் வைகோ காத்துக்கொண்டிருந்ததை பார்த்தார். தனது பேட்டியை நிறுத்திவிட்டு வைகோவுக்கு வழிவிட, இச்சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்தில் கூட அப்போலோவில் வைகோவை சீமான் சந்தித்திருந்தார்.

News October 30, 2025

ஊழல் இளவரசர்கள் ராகுல், தேஜஸ்வி: PM மோடி

image

பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, PM மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முசாபர்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழலில் திளைத்துபோன குடும்பத்தின் இளவரசர்களான ராகுல், தேஜஸ்வி தான், தேர்தல் களத்தில் தங்களுக்கு எதிரே நிற்பதாக குறிப்பிட்டார். இருவரும் தன்னை திட்டிக்கொண்டே இருப்பதாக கூறிய அவர், ‘பெயருக்காக’ வாழும் அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று விமர்சித்துள்ளார்.

News October 30, 2025

அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

image

OPS, செங்கோட்டையன், டிடிவி ஆகியோரின் சந்திப்பு திட்டமிட்டது என EPS கூறியுள்ளார். அவர்கள் திமுகவின் B டீம் என விமர்சித்துள்ள அவர், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார். அதிமுகவில் இருந்த சில துரோகிகளால்தான் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்ற அவர், அந்தியூரில் அதிமுகவின் தோல்விக்கு செங்கோட்டையனும் ஒரு காரணம் என சாடினார்.

News October 30, 2025

IND vs AUS: இந்தியா பவுலிங்

image

மகளிர் ODI WC அரையிறுதி போட்டியில், ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற ஆஸி., அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நவ.2-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும். இந்திய அணி இதுவரை 2005, 2017 என 2 முறை உலகக்கோப்பை ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது.

News October 30, 2025

அரசியல் வியூக களமாக மாறிய பசும்பொன்!

image

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையின் போது, OPS, சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. OPS, செங்கோட்டையன், TTV தினகரன் ஆகியோரும் சந்தித்து பேசியதோடு, புதிய கூட்டணி அமையும் என்றனர். ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமைதியாக இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்துள்ளதால் அவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 30, 2025

சமத்துவத்துக்காக தேவர் செய்த அர்ப்பணிப்பு: PM மோடி

image

இந்தியாவின் சமூக, அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய உயர்ந்த ஆளுமை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் ஏழைகளின் நலனுக்கான தேவரின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது எனவும், வரும் தலைமுறைகளுக்கு அது ஊக்கமளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் தேவர், ஆன்மீகத்தின் வழியில் கண்ணியம், ஒற்றுமை & சுயமரியாதைக்காக நின்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2025

சம்பளம், பென்ஷன் உயரும்… HAPPY NEWS

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் ஜனவரி 1, 2026-ல் இருந்து உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, 2.86 Fitment Factor அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய சம்பளம் ₹18 ஆயிரமாக இருந்தால் ₹51 ஆயிரம் வரை உயரலாம்.

News October 30, 2025

90 நிமிடங்கள் ஒன்னுமே செய்யாமல் இருக்க முடியுமா?

image

90 நிமிடங்கள் பேசாமல், போன் நோண்டாமல், தூங்காமல் சும்மா உட்கார்ந்துட்டு இருந்தால், நீங்கதான் வெற்றியாளர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள தென்கொரியாவில் ‘Space Out’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. கொஞ்சம் சும்மா இருந்தாலும், Over thinking-ஆல் பலருக்கும் நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றும். அதனை வெல்வதே இப்போட்டியின் நோக்கம். போட்டிக்கு யார் ரெடி?

News October 30, 2025

பெண்களுக்கு ₹1.40 லட்சம் தரும் அரசு திட்டம்

image

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹1.40 லட்சம் வரை மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 3.5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். கடன் பெற விரும்புவோரின் ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. பல பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும், SHARE THIS.

error: Content is protected !!