news

News December 1, 2024

T20: பாகிஸ்தான் அபார வெற்றி

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் PAK வென்றது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய PAK 165/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் உஸ்மான் கான், தயப் தாஹிர் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடி ZIM அணி, பாக். பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல்
108 ரன்களில் ஆட்டமிழந்தது. தயப் தாஹிர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News December 1, 2024

கையாலாகாத முதலமைச்சர்: இபிஎஸ் பதிலடி

image

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை என்று CM ஸ்டாலின் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள இபிஎஸ், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்சனையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். உரிய முறையில் செயல்பட்டு பிரச்சனையை தீர்ப்பது அரசின் கடமை. ஆனால், இங்கிருக்கிற முதலமைச்சரோ, பிரச்சனையை தீர்க்க முடியாத, கையாலாகாத, திராணியற்ற முதலமைச்சர் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

News December 1, 2024

ஃபெஞ்சல் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது

image

ஃபெஞ்சல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்துள்ளதாக வானிலை மையம் (MET) தெரிவித்துள்ளது. காலையில் புயலாக இருந்த நிலையில், பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது. இந்நிலையில், தற்போது தாழ்வு மண்டலமாக குறைந்து உள்ளதாகவும், விழுப்புரத்தில் இருந்து அது 20 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ., கடலூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருப்பதாக MET குறிப்பிட்டுள்ளது.

News December 1, 2024

பணம் பறிக்க முயற்சி: AAP எம்எல்ஏவுக்கு போலீஸ் காவல்

image

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பல்யானுக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி கபில் சாங்வான் என்பவரிடம், கட்டுமானப் பணி மேற்கொள்ளும் ஒருவரை மிரட்டி, தனக்கு பணம் பறித்து தருமாறு அவர் பேசிய ஆடியோ வெளியானது. இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, 2 நாள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

News December 1, 2024

கன்னட நடிகை தற்கொலை

image

கன்னட நடிகை சோபிதா சிவானா (30) தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாலேஸ்பூரை சேர்ந்த அவர், திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில் ஹைதராபாத் வீட்டில் சடலமாக கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னட மொழியில் ஏடிஎம், ஜேக்பாட் உள்ளிட்ட படங்களில் சோபிதா நடித்துள்ளார்.

News December 1, 2024

புயலில் மின்சாரம் துண்டிப்பா? இந்த நம்பரை அழையுங்க

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புயல் காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்வது, மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தின் உதவிக்கு என்ன செய்வது என சிலருக்குத் தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு மின்சார வாரியம் உதவி எண்ணை அறிவித்துள்ளது. 94987 94987 என்ற எண்ணை பதிவிட்டு, உதவி தேவையெனில் அழைக்கவும் என மின்சார வாரியம் கூறியுள்ளது. SHARE IT.

News December 1, 2024

T20: ZIM அணிக்கு 166 ரன்கள் இலக்கு

image

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புலவாயோ நகரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாக். கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அந்த அணி, 20 ஓவரில் 165/4 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான், தயப் தாஹிர் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

News December 1, 2024

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: உதயநிதி

image

விழுப்புரத்தில் மழை பாதிப்புகள் சரி செய்யப்பட்டு வருவதாக உதயநிதி கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு வருவதால் சில நாள்களில் இயல்பு நிலை திரும்பும் என்றார். மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும், முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

News December 1, 2024

4000 டிகிரி வெப்பம்.. பயமுறுத்தும் ரஷ்ய ஏவுகணை!

image

உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய ஒரேஷ்னிக் ஏவுகணை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. 5,000 கி.மீ. வரை இந்த ஏவுகணை சென்று தாக்கும். 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிடும். அதாவது சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலைக்கு இது சமம். இந்த வெப்பநிலையில் கெட்டியான இரும்புகளே உருகிவிடும். கட்டிடங்கள் ஆவியாகிவிடும்.

News December 1, 2024

10 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!