news

News December 2, 2024

BRICS நாடுகளுக்கு 100% வரி: டிரம்ப்

image

இந்தியா உட்பட BRICS அமைப்பில் உள்ள 9 நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என, USA அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 100% வரி விதிக்கப்படும். இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

News December 2, 2024

இதய நலனை பாதுகாக்கும் ஆலிவ் இலை தேநீர்

image

இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் இலையில் உள்ள ஒலியூரோபீனுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலிவ் இலை பொடியை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆலிவ் இலை டீ ரெடி. இந்த டீயை Low BP, நீரிழிவு உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்படி பருகலாம்.

News December 2, 2024

அதிகளவில் மழை பெய்தும் பாதிப்பில்லை: மா.சு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகளவில் மழை பெய்த போதும், தமிழக அரசின் பல்வேறு பணிகளால், மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளதென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த காலத்தில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்ததெனக் கூறிய அவர், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

News December 2, 2024

ஆசிய ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

image

U-21 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. ஓமனில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்து அபாரமாக விளையாடிய இந்திய ஆடவர் அணி ஆதிக்கம் செலுத்தியது. கடைசி வரை போராடிய தென் கொரிய அணியினரால் 1 கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.

News December 2, 2024

₹10 லட்சம் கோடியை தொடும் நகைக்கடன் சந்தை!

image

இந்தியர்களின் கடன் தேர்வில் தங்க நகைக்கடன் முன்னிலை வகிப்பதாக ரேட்டிங் அமைப்பான இக்ரா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 2024-25 நிதியாண்டில், தங்க நகைக்கடன் சந்தை ₹10 லட்சம் கோடியை தொடும். செப்டம்பரில் தங்க நகைக்கடன் வழங்கும் ஒருங்கிணைந்த பிரிவின் வளர்ச்சி 51% அடைந்துள்ளது. நகைக்கடனுக்கான எளிய அணுகல் வசதி இந்த பிரிவின் வளர்ச்சிக்கான காரணமாக கருதப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

News December 2, 2024

டிசம்பர் 2 வரலாற்றில் இன்று!

image

➤1697 – லண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. ➤1859 – அடிமை ஒழிப்பு போராளி ஜான் பிரவுன் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார். ➤1947 – பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டது. ➤1971 – அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 நாடுகள் UAE என்ற பெயரில் இணைந்தன. ➤1988 – பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதமரானார். ➤2002 – இலங்கை அரசு – புலிகள் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை தொடங்கியது.

News December 2, 2024

சீமானின் பாதை வேறு; பாஜகவின் பாதை வேறு

image

சீமானின் பாதை வேறு; பாஜகவின் பாதை வேறு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு நாங்கள் எப்போதும் பயப்பட மாட்டோம். சினிமா மாதிரி அரசியல் களம் கிடையாது. அரசியல் களம் என்பது வேறு” என்றார்.

News December 2, 2024

ஈராண்டுக்கு பின் ‘சாம்பியன்’ பட்டம் வென்ற PV சிந்து

image

‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற சையது மோடி பேட்மிண்டனின் இந்திய வீராங்கனை PV சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அவர், சீனாவின் வு லுவோவுடன் மோதினார். அபாரமாக ஆடிய சிந்து 2-0 என்ற நேர் செட் கணக்கில் லுவோவை வீழ்த்தினார். இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் சாம்பியன் ஆனார்.

News December 2, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 116 ▶குறள்: கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். ▶பொருள்: நியாயத்தை, நீதியை நிலைநாட்டும் நடுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால், அவன் கெட்டு சீரழிந்து ஒழியப் போகிறான் என காண்போர் உணர்ந்து கொள்ளலாம்.

News December 2, 2024

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி?

image

34 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினி – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச.12ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. மேலும், ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர்-2 படத்தின் புரோமோ வீடியோ & கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!