news

News December 2, 2024

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது. உள் மாவட்டங்களில் இப்படியான மழை பெய்வது மிகவும் அரிதான நிகழ்வாகும். அரூர் – 33 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பனந்தாள் – 32 செமீ, ஏற்காடு – 23 செமீ, தி.மலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் – 22 செமீ என பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியிருக்கிறது.

News December 2, 2024

தமிழகத்தில் மழை பாதிப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்

image

தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவை செயலாளருக்கு திமுக எம்.பி TR.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர் சேதங்களை மத்தியக் குழு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

News December 2, 2024

விரைவில் 8,677 வீடுகள் ஒப்படைப்பு

image

நகர்ப்புற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 8,677 வீடுகள் பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் சென்னை எர்ணாவூரில் 6,877 வீடுகளும், கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் 1,800 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இதில் பங்களிப்பு தொகை செலுத்தியவர்களுக்கு வீடுகள் தரப்பட்ட நிலையில், எஞ்சிய வீடுகளும் ஒப்படைக்கப்பட உள்ளன.

News December 2, 2024

சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்கும் சித்தார்த்

image

இன்னும் பக்குவமான நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சித்தார்த் என்றால் காதல் படங்கள்தான் என்ற முத்திரை குத்திவிடக்கூடாது என்பதற்காகவே காதல் படங்களுக்கு பிரேக் கொடுத்ததாகக் கூறினார். இதனிடையே, சந்தோஷம்தான் முக்கியம் என்பதால், காரசார கருத்துகளைப் பகிர்வதைத் தவிர்த்து, சினிமாவில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

News December 2, 2024

முக்கிய ரயில்கள் சேவையில் மாற்றம்!

image

நெல்லையில் இருந்து நேற்று மாலை தாம்பரம் புறப்பட்ட அந்தியோதயா ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்(16752), செங்கோட்டை – சென்னை எழும்பூர்(12662), கொல்லம் – சென்னை எழும்பூர்(20636) ரயில்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக அல்லாமல் காட்பாடி வழியாக சென்னைக்கு இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

5 வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை

image

கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் இன்று கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கானு கமெண்ட்ல சொல்லுங்க.

News December 2, 2024

மகாராஷ்டிரா CM யார்? இன்று இறுதியாகிறது

image

மகாராஷ்டிராவின் அடுத்த CM யார் என்ற எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வர உள்ளது. இன்று நடக்க உள்ள கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவிஸ் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன், அவரே CM என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இதனால், ஏமாற்றமடைந்த ஏக்நாத் ஷிண்டே தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 2, 2024

கனமழை எதிரொலி: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு!!

image

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நதியில் வெள்ளம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் யாரும் பம்பை நதியில் இறங்கவோ, நீராடவோ வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, பக்தர்கள் இரவு நேரங்களில் மலை ஏறுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 2, 2024

இது உழைப்புக்காக கிடைத்த பட்டம்: எஸ்.ஜே.சூர்யா

image

தான் உழைப்புக்கு உண்மையாக இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற பின் பேசிய அவர், தான் அறிவாளியா? முட்டாளா? பலசாலியா? என்று கேட்டால் தனக்கு தெரியாது எனவும், ஆனால் இந்த பட்டம் உண்மைக்கும் தனது உழைப்புக்கும் கிடைத்த பரிசு என்றும் கூறினார். மேலும், தன்னிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் உழைப்பு என்பதை மட்டும் 100% பெருமிதத்தோடு கூறுவேன் என்றார்.

error: Content is protected !!