India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத்(83) காலமானார். 1964 – 1976 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர், தொடக்க ஆட்டக்காரராக 66 டெஸ்ட் போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 1969-70ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 32 ரன்களை விளாசி ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை தற்போதும் தக்கவைத்து கொண்டுள்ளார்.
ஜாமின் பெற்ற மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராகிறார் என்றால் என்ன நடக்கிறது என SC ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது. அவரது ஜாமினை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மோசடி வழக்கில் சிக்கியவர் அமைச்சராக இருந்தால், எப்படி அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியதோடு, சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீன போர்க் கப்பல்கள் நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பதாக கடற்படை தளபதி கே. திரிபாதி தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் நடைபெறும் கடற்படை மாநாட்டில் பேசிய அவர், இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள் நடமாட்டத்தை இந்தியா கவனித்து வருவதாகக் கூறினார். அதேபோல், மற்ற நாடுகளின் போர்க் கப்பல்கள் நடமாட்டமும் கடற்படையால் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளம் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி – மாரி காம்பினேஷன் எப்படியிருக்கும்?
மனிதர்களின் இறுதி நாளை கண்டறியும் Death Clock என்ற AI செயலி கவனம் ஈர்த்துள்ளது. சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் இந்த AI செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம், தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நமது ஆயுட்காலத்தை இந்த செயலி துல்லியமாக கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.
பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய விவகாரத்திலும், திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறு பேசிய விவகாரத்திலும் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போலீசிடம் மனு அளித்திருந்தனர். <<14767601>>இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு க்ளிக்.<<>>
இன்று மக்களவை தொடங்கியதும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்க அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரி திமுக MP-களும் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும், இதே காரணத்தால் அவை நடைபெறவில்லை. அரசு, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கலாமா? உங்கள் கருத்து என்ன?
பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய பாஜகவின் H.ராஜா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஹெச்.ராஜா X தளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிராக திமுகவினர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி கனிமொழி குறித்த X பதிவு விவகாரத்திலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா-2 படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக வெளியான தகவல்களை ரஷ்மிகா மறுத்துள்ளார். அந்தத் தகவல் அனைத்தும் வதந்தி என்று அவர் கூறியுள்ளார். புஷ்பா 1 படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததாகவும், அதுபோல புஷ்பா-2இல் நடித்ததற்கு தனக்கு விருது கிடைக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, புஷ்பா-1க்கு ரூ.2 கோடி, புஷ்பா-2க்கு ரூ.10 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகின.
ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல், வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து CM ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு செய்த அவர், புயல் பாதிப்பு பற்றியும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.