news

News December 2, 2024

இதுவே என்னோட லட்சியம்: ஜெய் ஷா உறுதி

image

ICC தலைவராக பதவியேற்றப் பின் ஜெய் ஷா பேசும் போது, நாம் LA2028 ஒலிம்பிக் தொடருக்காக தயாராகி வரும் இந்நேரம் முக்கியமான தருணம். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான ஈர்ப்பை அதிகரிக்க ஒலிம்பிக் உதவும் எனக் கூறினார். பெண்கள் கிரிக்கெட்டின் திறனை மேலும் வலுப்படுத்த ICC தனி கவனம் எடுத்து கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். ICC தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5வது இந்தியர் ஜெய் ஷா.

News December 2, 2024

கை, கால்கள் முறிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சிறுமி

image

ஹரியானாவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நூஹ் மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானார். விசாரணையில் இளைஞர் ஒருவர் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில், கை கால்கள் முறிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சிதைந்த உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.

News December 2, 2024

மின்சார பைக் மீது ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

image

மின்சார பைக் விற்பனை 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில் 2024 நவம்பரில் 29% அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நவம்பரில் மட்டும் 1.18 லட்சம் EV பைக் விற்பனையாகி உள்ளன. இதையும் சேர்த்து இந்தாண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட EV பைக் விற்பனையாகியுள்ளன. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் EV பைக் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்கள் என்ன பைக் வைத்துள்ளீர்கள்? கமெண்ட் பண்ணுங்கள்.

News December 2, 2024

நாளை கனமழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின், படிப்படியாக மழை குறைந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) ஃப்ரெட்ரிக் க்ரான்ஸ்டெட் நிக்கல் உலோகத்தை கண்டுபிடித்தார் 2) இயேசுவின் தாய் மொழி – அரமேயம் 3) இந்தியாவின் முதல் பெண் மின்சார பொறியாளர் – அய்யாலசோமயாஜுலா லலிதா 4) முயலின் அறிவியல் பெயர் – Oryctolagus cuniculus 5) POTA – Prevention of Terrorism Act 6) வெப்பக்கதிர் வீச்சை அளக்க உதவும் கருவி – Radiomicro meter 7) அஞ்சுகம் என்ற சொல் கிளியை குறிக்கும். 8) தென் கொரியாவின் தேசிய மலர் – முகுங்வா.

News December 2, 2024

BGT தொடரில் இணைகிறாரா முகமது ஷமி?

image

வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி BGT தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வரும் ஷமியை BCCI உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறதாம். அவரின் உடல் தகுதியின் அடிப்படையில் அவர் அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் பெங்கால் அணியில் ஷமி சிறப்பாக விளையாடி வருகிறார்.

News December 2, 2024

கனவாய் மாறிய IPS பதவி

image

IPS, IAS அதிகாரி ஆக வேண்டும் என்பது இளைஞர்களின் லட்சியமாக இருக்கும். இதற்காக அவர் மட்டுமல்லாமல் குடும்பமே பல தியாகங்களை செய்யும். இதுபோல தியாகம் செய்து IPSஇல் தேர்ச்சி பெற்ற ஒருவர், பணியில் சேரும் முன்பே உயிரை இழந்துவிட்டார். ம.பி.யை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் (26) IPS தேர்வாகி ஹாசனில் டிஎஸ்பியாக பொறுப்பேற்க போலீஸ் காரில் சென்றபோது மரத்தில் மோதி அவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 2, 2024

3ஆம் உலகப் போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

image

2024 ராணுவ பட்ஜெட்டை ரூ.12.28 லட்சம் கோடியாக அதிகரித்து விளாதிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். 2023ம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது 28.3% அதிகமாகும். போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதால் 3ஆம் உலகப் போர் மூளும் என ரஷ்யா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் ராணுவ பட்ஜெட்டை ரஷ்யா அதிகரித்திருப்பது, 3ஆம் உலகப் போருக்கு தயாராகிறதோ என்ற எண்ணத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

News December 2, 2024

49,451 TO 48,246.. சரிந்த HYUNDAI விற்பனை

image

2024 நவம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாருதி சூசுகி கார்கள் 1,41,312 விற்பனையாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2023 நவம்பருடன் (1,34,158) ஒப்பிடுகையில் இது அதிகமாகும். டாடா (74,753), மஹிந்திரா (74,083) விற்பனையும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. HYUNDAI கார்களின் உள்ளூர் விற்பனை 49,451இல் இருந்து 48,246ஆக (2.4%) குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News December 2, 2024

சபர்மதி படத்தை காணும் மோடி

image

சபர்மதி படத்தை PM மோடி இன்று நேரில் பார்க்கவுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவர் படத்தை காண இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் மூண்ட பெரும் கலவரத்திற்கு காரணமாக சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கரசேவகர்கள் உள்ளிட்ட 59 பேர் பலியாகினர். இதை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!