India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். பரஸ்பரம் இந்தியா, ரஷ்யத் தலைவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பிற நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதினை மாேடி அழைத்துள்ளார். இதையேற்று, 2025 ஆரம்பத்தில் அவர் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால், 2022 உக்ரைன் போர் தொடங்கியபிறகு இந்தியாவில் புதின் மேற்கொள்ளும் முதல் பயணமாகக் கருதப்படும்.
உதயநிதி ஸ்டாலின் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் சுமார் 40 நிமிடம் தவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்திற்கு அவர் விமானத்தில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக நடுவானில் 6 முறை வட்டமடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிற்பகல் 3.25 மணிக்கு இறங்க வேண்டிய உதயநிதி பயணித்த விமானம், மாலை 4.05 மணிக்கே கீழே தரையிறங்கியதாக சொல்லப்படுகிறது.
அரபிக் கடலில் நாளைக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த பிறகு வலுக்குறைந்தது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இது நாளைக்குள் வட கேரளா- கர்நாடக கடற்பகுதியின் மீது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று IMD கணித்துள்ளது.
சொந்த நாட்டில் இந்திய அணியை தோற்கடிக்க வேண்டும் என PAK முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க IND பாக். வரவில்லை என்பதற்காக விமர்சிக்க விரும்பவில்லை என்ற அவர், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதே பாக். அணி கொடுக்கும் சிறந்த பதிலடியாக இருக்கும் என்றார். கிரிக்கெட்டில் அரசியல் கலப்பை விரும்பவில்லை, அதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வருகிற ஜனவரி மாதம் முதல் கார்கள் விலையை உயர்த்த ஜெர்மனியின் AUDI நிறுவனம் முடிவு செய்துள்ளது. AUDI நிறுவன இந்திய பிரிவு தலைவர் பல்பீர் சிங் தில்லான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செலவீனம் அதிகரிப்பால், ஜன 1 முதல் 3% விலை உயர்த்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ் ஆகியவை அண்மையில் கார் விலையை உயர்த்தின. இதையடுத்து AUDI-யும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
McAfee எனும் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில், சில மோசடி ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்கண்ட ஆப்-கள் நம் செல்போனில் உள்ள வங்கி விவரங்கள், UPI பாஸ்வேர்டு, ஃபோட்டோ, வீடியோவை திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பிவிடுமாம். RupiahKilat-Dana cair, KreditKu-Uang Online, Dana Kilat-Pinjaman kecil, Cash Loan-Vay tiền, RapidFinance, PrêtPourVous Huayna Money ஆகிய ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க.
ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்துள்ள விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி 1,29,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நிவாரண நிதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
கடற்படைக்கு புதிதாக 62 போர் கப்பல்கள், 1 நீர்மூழ்கி கப்பலை இந்தியா கட்டமைத்து வருவதாக கடற்படை தளபதி கே. திரிபாதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் புதிய அணுசக்தி நீர்மூழ்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இதனால் கடற்படையின் வலிமை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நீர்மூழ்கியில் இருந்து சோதிக்கப்பட்ட ஏவுகணையின் துல்லியத் தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 334 காலிப்பணியிடங்களுக்கு இம்மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாக பொறியாளர், கூடுதல் தலைமை பொறியாளர் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வுகள் நடைபெறும். மாத ஊதியமாக ₹50,000 – ₹2,80,000 வரை பெறலாம். முழு விவரத்தையும்: https://www.nlcindia.in/ மூலம் அறியலாம்.
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தான், தற்போது அதே தீவிரவாதத் தாக்குதல்களுக்கு சொந்த நாட்டு மக்களின் உயிரை பலி கொடுத்து வருகிறது. நவம்பரில் மட்டும் 68 பாதுகாப்பு படையினர் உள்பட 245 பேர் தீவிரவாதத் தாக்குதல்களில் பலியாகி இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களில் 127 பேர் தீவிரவாதிகள், 50 பேர் அப்பாவி மக்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.