news

News December 2, 2024

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போது வரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தொடர்ந்து, திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

News December 2, 2024

அப்படி என்ன சமாளிச்சிட்டீங்க? பிரேமலதா

image

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என முதல்வர் கூறிய நிலையில், மக்கள் இன்று நடுரோட்டில் நிற்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 2 நாள்கள் மழையையே சமாளிக்க முடியாத இந்த அரசு, மக்களை காப்பாற்றி விட்டோம் என கூறுவது அபத்தமானது எனவும், முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 2, 2024

4 மாவட்டங்களில் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 2, 2024

மணிக்கு 1,000 கி.மீ: மிரட்டலாக தயாராகும் புதிய ரயில்!

image

மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலை சீனா தயாரித்து வருகிறது. விமானமே மணிக்கு 824 கி.மீ. வேகத்தில்தான் செல்லும் என்கிற போது, இந்த ரயில் அதை விட வேகமாக பறக்கப் போகிறதாம். அதாவது, சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல இப்போது 24 மணிநேரமாகும் நிலையில், இந்த ரயிலில் ஒரு மணிநேரம் 15 நிமிடத்தில் சென்று விடலாம். இதற்காக ELECTRO MAGNETIC தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

News December 2, 2024

பாக். பெண் டிக்-டாக் பிரபலமின் “அந்த” வீடியோ கசிவு

image

பாகிஸ்தானைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலங்கள், டிவி பிரபலங்களின் படுக்கை அறை வீடியோக்கள் அண்மைக் காலமாக சமூகவலை தளங்களில் கசிந்து வருகின்றன. அந்த வரிசையில் டிக்-டாக்கில் பிரபலமாக உள்ள மரியம் பைசம் என்பவர், அவரின் ஆண் நண்பரோடு படுக்கை அறையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ரகசிய வீடியோ கசிந்துள்ளது. இதையடுத்து அவரை சமூகவலை தளங்களிலும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

News December 2, 2024

மீண்டும் புயல் வருகிறதா?.. IMD என்ன சொல்லுது பாருங்க

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோதிலும், அதிகனமழையால் தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்படியொரு சூழ்நிலையில், இந்த வார இறுதியில் புதிய புயல் உருவாகவுள்ளதாக பீதியை கிளப்பும் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள IMD, புயல் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை என விளக்கமளித்துள்ளது.

News December 2, 2024

இந்தியா அபார வெற்றி

image

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் குரூப்-A பிரிவு ஆட்டமொன்றில், ஜப்பான் அணியை 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. முதலில் களமிறங்கிய IND 50 ஓவரில் 339/6 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது அமான் 122 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய ஜப்பான் அணி, இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் எடுக்கத் திணறியது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 128/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

News December 2, 2024

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000: ஒத்திவைப்பு

image

PM INTERNSHIP திட்ட தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 நிறுவனங்களில் 1 வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை மோடி இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News December 2, 2024

BREAKING: 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. SHARE IT.

News December 2, 2024

BJP அரசியல் அபத்தமானது: ஆதித்ய தாக்கரே

image

மகாராஷ்டிராவில் இன்னும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாதது ஏன்? என ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். நவ.26 ஆம் தேதியே சட்டமன்றம் காலாவதியான நிலையில், இதுவரை பாஜக கூட்டணியால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். ஆட்சி அமைப்பது பற்றி ஆளுநர் அறிவிக்காமல், டிச.5ஆம் தேதி புதிய முதல்வர் பதவியேற்பார் என பாஜக கூறுவது, அபத்தமான அரசியல் என்றும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!