news

News December 3, 2024

ஹேசல்வுட் காயத்தின் பின்னணி மர்மம்: கவாஸ்கர்

image

அடிலெய்டில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸி. அணியின் ‘வேகப்புயல்’ ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “பெர்த் டெஸ்ட் தோல்வி, ஆஸி அணியில் பதட்டத்தை காண முடிகிறது. திடீரென ஏற்பட்ட காயத்தால் ஹேசல்வுட் தொடரில் இருந்து முழுமையாக விலகவும் வாய்ப்பு உண்டு. இவரது காயத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது” என்றார்.

News December 3, 2024

தமிழக அரசிடம் போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா

image

ஃபெஞ்சல் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள போதிய திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட வேண்டும்” என்றார்.

News December 3, 2024

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

image

ஃபெஞ்சல் வெள்ள பாதிப்பு காரணமாக இன்று நடக்கவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

டிசம்பர் 3 வரலாற்றில் இன்று!

image

➤1889 – புரட்சியாளர் குதிராம் போஸ் பிறந்த நாள். ➤1919 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்கு பின் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. ➤1944 – ஏதென்ஸில் உள்நாட்டுப் போர் வெடித்தது. ➤1967 – உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை கேப் டவுனில் நடந்தது. ➤1984 – போபால் நச்சு வாயுக் கசிவு பேரழிவு நேர்ந்தது. ➤1994 – ஜப்பானில் PlayStation வெளியிடப்பட்டது. ➤2011 – பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் மறைந்த நாள்.

News December 3, 2024

26 ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா

image

பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல் மரைன் ஃபைட்டர் விமானங்களை (₹30,000 கோடி) வாங்க இருப்பதாக இந்திய கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அத்துடன், இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்த இரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

News December 3, 2024

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான காரணம் என்ன?

image

அமெரிக்க டாலருக்கு நிகரான வரலாறு காணாத வகையில் ₹84.73ஆக நேற்று சரிந்தது. இந்த மதிப்பு வீழ்ச்சிக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு மேக்ரோ பொருளாதார தரவு, FPI வெளியேற்றம், செப்., காலாண்டில் ஏமாற்றமளித்த கார்ப்பரேட் முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. பிரிக்ஸ் நாணயம் குறித்த டிரம்பின் அறிக்கைக்குப் பின், ஆசிய நாணயங்களின் மதிப்பும் குறைந்துள்ளதாக அறியமுடிகிறது.

News December 3, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 117 ▶குறள்: கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. ▶பொருள்: நியாயத்தை, நீதியை நிலைநாட்டும் நடுநிலைமையோடு வாழ்கின்ற ஒருவருக்கு அதன் காரணமாக வறுமை ஏற்படுமானால்,
அதை வறுமை என்று உயர்ந்தோர் ஒருபோதும் எண்ண மாட்டார்கள்.

News December 3, 2024

7ஆவது முறையாக ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுமா?

image

U21 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. ஓமனில் 10ஆவது சீசன் நடந்து வருகிறது. அதன் லீக் சுற்றில் தாய்லாந்து (11-0), ஜப்பான் (3-2), சீனதைபே (16-0), தென் கொரியாவை (8-1) வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தினால், 7ஆவது முறையாக ஃபைனலுக்கு முன்னேறலாம். மற்றொரு அரையிறுதியில் பாக்., ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

News December 3, 2024

கற்றல் திறன் திறனறி தேர்வு – இன்று நடக்கிறது!

image

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மாநில அளவில் கணக்கிட, ஆண்டுதோறும் திறனறி தேர்வை மத்திய அரசு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்வு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், 25 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அனைத்து பள்ளிகளிலும் இன்று நடைபெற உள்ளது. தமிழ் & ஆங்கில வழியில் இரண்டு மணி நேரம் நடக்கும் இத்தேர்வை 3, 6, 9ஆம் வகுப்பு படிக்கும், 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.

News December 3, 2024

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?

image

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் & ஊழல் வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவர் அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது” எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!