news

News December 3, 2024

செவ்வரளி சூட்டி ஸ்ரீபாலாவை வணங்குங்கள்!

image

சாக்த தெய்வமான அன்னை ஸ்ரீராஜேஸ்வரியின் குழந்தை ரூபமாக ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆன்மிக நூல்கள் துதிக்கின்றன. அத்தகைய தெய்வம் திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கத்தில் ஸ்ரீபாலாவாக கோயில் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமையில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து அந்த திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீவித்யை பாடி செவ்வரளி சூட்டி, தீபமேற்றி சிரத்தையுடன் ஸ்ரீபாலாவை வணங்கினால் வேண்டிய அனைத்தும் கிட்டும் என்பது ஐதீகம்.

News December 3, 2024

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம், தி.மலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News December 3, 2024

சிக்மண்ட் பிராய்ட்டின் பொன்மொழிகள்

image

✍வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். ✍காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலையே அன்றி வேறொன்றுமில்லை. ✍ஒரு கல்லுக்குப் பதிலாக ஒரு அவமதிப்பை வீசிய முதல் மனிதரே நாகரீகத்தை நிறுவினார். ✍மனிதனின் அறிவின் உச்ச அளவு என்பதே அவனுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதுதான். ✍அழகைவிட ஆன்மாவிற்குள் நேரடியாகச் செல்லும் வழி எதுவுமில்லை. ✍அழகு கவனத்தை ஈர்க்கும்; ஆளுமை இதயத்தை ஈர்க்கும்.

News December 3, 2024

நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை அல்ல: தமன்னா காட்டம்

image

தமிழில் ஜெயிலர், ஹிந்தியில் ஸ்த்ரி-2 ஆகிய படங்களில் குத்துப்பாடலில் தமன்னா நடனம் ஆடி இருந்தார். இந்த படங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. இதனால் அவரது குத்தாட்டம் இடம்பெற்றால் அப்படம் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட் பரவியது. பல தயாரிப்பாளர்கள் அவரை தங்களது படங்களில் ஆட அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கடுப்பான அவர், “தொடர்ந்து பாடல்களில் ஆட நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை அல்ல” என மறுத்துள்ளார்.

News December 3, 2024

டிச.22இல் பி.வி.சிந்துவுக்கு டும் டும் டும்!

image

இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு (29) வரும் டிச. 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார். சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

News December 3, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶டிச. – 03 ▶கார்த்திகை – 18 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: திரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: கார்த்திகை & ரோகிணி ▶நட்சத்திரம்: மூலம்.

News December 3, 2024

JOB ALERT: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.3) நிறைவடைகிறது. Trade Apprentice பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 15-24. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ITI (50% மதிப்பெண்கள்). பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

News December 3, 2024

பொதுப்பணி துறை பெயரில் போலி வலைதளப் பக்கம்

image

பொதுப்பணி துறை பெயரில், பேஸ்புக்கில் போலி பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக, விளம்பரம் செய்துள்ளனர். அத்துடன் மொபைல் போன் எண் ஒன்றை அளித்து, சிலரிடம் வேலை குறித்து பேசி, விண்ணப்பக்கட்டணம் என்ற பெயரில் மோசடி செய்துள்ளனர். இது குறித்து எழுந்த புகாரை அடுத்து துறை சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் கம்பளைண்ட் அளிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

முக்கிய முடிவை எடுக்கும் RBI

image

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு (MPC) கூட்டம் நாளை (டிச.4) கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதைவிட, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. சர்வதேச வர்த்தகக் கொள்கை மாற்றம், பொருளாதார நிச்சயமின்மை போன்றவைக் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

News December 3, 2024

ஏலக்காய் நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மை!

image

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சூடான நீரில் ஏலக்காயைபோட்டு குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. * செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறை தடுக்கும். * உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். *ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் அதிகரிக்கும். *உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும். *சுவாச பாதை தொற்றுப் பிரச்னையை போக்கும்.

error: Content is protected !!