India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக ₹2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புவியிலிருந்து 65,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள ‘Proba-3’ சாட்டிலைட் சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தி.மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் சிக்கிய நிலையில், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரின் உடல்களை மீட்பதற்காக மிர்சி, ரூபி ஆகிய மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு துணை முதல்வர் உதயநிதி நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டதுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், குடும்பத்தினருக்கு CM பொது நிவராண நிதியிலிருந்து நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் திருமண செலவு சராசரியாக ₹37 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ‘Wed me good’ என்ற திருமண ஏற்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், நடப்பாண்டில் கிட்டத்தட்ட 48 லட்சம் திருமணங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதற்காக மொத்தம் ₹8 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் சராசரி ₹37 லட்சமாக இருக்கும் நிலையில், கடந்தாண்டை விட 7% அதிகரித்துள்ளது. சுமார் 1% பேர் ₹1 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை செயலாளருக்கு DMK எம்.பி கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் கனமழையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ₹2,475 கோடி தேவைப்படுவதாக தமிழக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக MET தெரிவித்துள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலையில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் MET கூறியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, ஆஸ்திரேலியா போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். BGT தொடரின் 2ஆம் டெஸ்ட் நடைபெறும் அடிலெய்டு மைதானத்தில் 2012ல் ஒரு சதமும், 2014ல் 2 சதங்களும், 2021ல் ஒரு அரைசதமும் விராட் விளாசியுள்ளார். அவர் மீது இருந்த விமர்சனங்களுக்கு ஏற்கனவே முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து கோலி பதிலடி கொடுத்து விட்டார்.
விழுப்புரம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று அரசூர் பகுதியில் சென்னை – திருச்சி ஹைவேயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்நிலையில், அந்தப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து சீரானது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின் விநோகம் இல்லை.
சிறப்பு ஜிஎஸ்டி விகிதத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 5%, 12%, 18% மற்றும் 28% என 4 ஜிஎஸ்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், புகையிலை பொருட்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு 35% ஜிஎஸ்டி விதிக்க GoM பரிந்துரை அளித்துள்ளதாகத் கூறப்படுகிறது. இதனால் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.