news

News December 3, 2024

வெள்ள பாதிப்பு: ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் மோடி

image

தமிழக வெள்ளப் பாதிப்பு குறித்து CM ஸ்டாலினிடம் PM மோடி கேட்டறிந்துள்ளார். ஃபெஞ்சல் புயலுக்கு தமிழகத்தில் 12 பேர் பலியான நிலையில், பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, மோடிக்கு ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ரூ.2,000 கோடி ஒதுக்கும்படி அவர் கோரியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஸ்டாலினிடம் தேவையான உதவி செய்யப்படும் என மோடி உறுதியளித்துள்ளார்.

News December 3, 2024

தமிழகத்தின் மெதுவான புயல் ‘ஃபெஞ்சல்’

image

தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தொலைவை ஃபெஞ்சல் புயல் மிக மெதுவாக கடந்துள்ளது. பொதுவாக புயல்கள் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் 250 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை பயணிக்கும். புயல்கள் உருவான 3ஆவது நாளில் வலுவிழக்கும். ஆனால், இந்த புயல் 3 கி.மீ. வேகத்தில்தான் பயணித்தது. இதனால், 500 கி.மீ. தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக்கொண்டது. இதுவே அதிக மழை பொழிவுக்கு காரணம்.

News December 3, 2024

காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்க ராகுல் உத்தரவு

image

தமிழகத்தில் மழையால் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்யம்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் இதுவரை 12 பேர் பலியான நிலையில், 69 லட்சம் குடும்பங்களில் சுமார் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை எவ்வளவு? 2) வளி மண்டல ஈரப்பத மாற்றங்களைக் கண்டறிய உதவும் கருவி எது? 3) இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்? 4) மயன் நாகரிகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது? 5) NSA Act என்பதன் விரிவாக்கம் என்ன? 6) ‘திருமுருகாற்றுப்படை’ எனும் நூலின் ஆசிரியர்? 7) கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடு இனம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News December 3, 2024

18 மீனவர்களை கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 18 மீனவர்களையும், 2 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. காங்கேசன் துறையில் உள்ள முகாமிற்கு சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

News December 3, 2024

JUST IN: தங்கம் விலை ₹320 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹7,130, சவரன் ₹57,040 விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹60-ம், சவரனுக்கு ₹480-ம் குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. ஆனால் அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. கிராம் வெள்ளி ₹100க்கும், 1 கிலோ வெள்ளி ₹1 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

News December 3, 2024

நடிகர் மன்சூர் அலிகான் மகனிடம் போலீஸ் விசாரணை

image

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன், துக்ளக் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் அவர் தொடர்பில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னை திருமங்கலம் போலீசார் துக்ளக்கிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும். பிரபலங்களின் பிள்ளைகள் போதை வழக்குகளில் சிக்குவது தற்போது அதிகரித்துள்ளது. இதுபற்றி உங்க கருத்து?

News December 3, 2024

கீர்த்தியை பொண்ணு கேட்டு போன விஷால் பெற்றோர்

image

சண்டக்கோழி 2 படத்தின் சூட்டிங்கில் கீர்த்தி சுரேஷை பார்த்த விஷாலின் பெற்றோர் அவரை விஷாலுக்கு திருமணம் செய்வது குறித்து லிங்குசாமியிடம் கூறி இருக்கிறார்கள். லிங்குசாமியும் கீர்த்தி சுரேஷிடம் பேச, தான் ஏற்கனவே ஒருவரை காதலிப்பதாக கூறி மறுத்துள்ளார். இதனை சித்ராலட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறினார். கீர்த்தி சுரேஷுக்கு அவரது நீண்ட நாள் காதலருடன் டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

Waiting list பயணிகளுக்கு அனுமதி கிடையாது

image

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள பயணிகள் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாமா என நாடாளுமன்றத்தில் MP ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விதிகளின்படி வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தினார். கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய பண்டிகை நாள்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.

News December 3, 2024

தலைவராக இருக்க சீமானுக்கு தகுதி இருக்கா? நாஞ்சில் சம்பத்

image

அண்மை பேட்டி ஒன்றில் நாஞ்சில் சம்பத் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு தொகுதியிலாவது சீமான் ஜெயித்து இருக்கிறாரா? இவர் எப்படி அரசியல் சூப்பர்ஸ்டார் என்று வினவி, 8% வாக்குகள் பெற்றுவிட்டால் நா.த.க பெரிய கட்சி ஆகிவிடுமா? எனக் கேட்டார். கட்சி தலைவராக இருக்க சீமானுக்கு தகுதி இருக்கிறதா? என்றும் சீமானின் கட்சி 2026இல் தமிழ்நாட்டிலேயே இருக்காது என்றும் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.

error: Content is protected !!