India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேளச்சேரியில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சக்திவேல் மரணமடைந்தார். அதேபோல், மண்ணடியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற போது வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். மேலும், வியாசர்பாடியில் இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
‘ஆடை’ படத்தின் க்ளைமேக்ஸில் வரும் ப்ராங் போர்ஷன் மற்றும் கற்பு தொடர்பான வசனங்களை தவிர்த்திருந்தால், அது நல்ல படமாக அமைந்திருக்கும் என இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். சர்வைவல் படத்தை, போஸ்டரை பார்த்து ரிவெஞ்ச் டிராமா என நம்பி ரசிகர்கள் ஏமாந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்போது எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் அட்வைஸ் பண்ணி போர் அடிக்க வைத்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் கிளை, மண்டல், மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அக்கட்சி விதிகளின் படி, 33% நிர்வாகிகள் பெண்களாக இருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் தகுதியான பெண்கள் இல்லை எனக் கூறி, அந்த இடத்தில் ஆண் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பெண் நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அதை காலியாக விட்டுவிடுமாறு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னரும் அது வலுவிழக்காமல் இருப்பதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அரசு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக 6 – 8ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் கற்பிக்கும் 500 ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி தரப்படுகிறது. இதில், எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல் துறை சார்ந்த தொழிலை தேர்வு செய்வதை ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மயிலத்தில் (விழுப்புரம்) 50 செ.மீ மழை (24 மணி நேரத்தில்) பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை 10 முறை மட்டுமே இவ்வளவு கனமழை பதிவாகியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தியில் 82 செமீ மழை பதிவானதே வரலாற்று உச்சமாகும். அதன்பின், 1965 – வந்தவாசி (70 செமீ), 2008 – ஒரத்தநாடு (65 செமீ), 1943 – கடலூர் (57 செமீ), 1846 – சென்னை (55 செமீ) என்று பதிவுகள் உள்ளன.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தி.நகர், வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளித்த நிலையில், மழைநீரை அகற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றிரவுக்கு மேல் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லாததால், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
‘அமரன்’ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ₹105 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல்தான் தயாரித்து இருந்தார். ஆனால் அவரது ‘விக்ரம்’ படத்தின் வெளிநாட்டு வசூலையே இப்படம் முந்தியுள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளியான ‘விக்ரம்’ ₹101 கோடி வசூலித்தது. SK தனி ஆளாக நின்று அவர்களை முந்தியுள்ளதாக ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் 2வது நாளாக இன்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 26 பன்னாட்டு விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த லண்டன், பிராங்க்பர்ட், ஹாங்காங், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு சேவையிலும் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.