India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கங்குவா’ படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் ₹100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான விமர்சனங்களை சந்தித்தும் இவ்வளவு விலைக்கு வாங்கியிருப்பது விநோதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், சூர்யா எதிர்ப்பாளர்கள் செய்த ட்ரோல்களால்தான் தியேட்டர்களில் படம் ஹிட் அடிக்கவில்லை, எனவே OTT-யில் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையிலேயே அமேசான் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி இரவு 11.30 மணியளவில் கடந்து முடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், இன்று காலை வரை புயல் கடலிலேயே இருப்பதாகவும் அது கரையை தொடவே இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாட்டிலைட் படங்களும் அதனை உறுதி செய்கின்றன. வானிலை மையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் என்று தெரிகிறது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் முகாம்களாக மாறுவதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய PM 11 அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி களம் இறங்கியுள்ளது. போட்டியின் முதல் நாளான நேற்று மழையால் ரத்தான நிலையில், இன்று காலை டாஸ் வென்று பவுலிங்-ஐ தேர்வு செய்துள்ளது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற நாட்டு வீரர்கள் அந்நாட்டின் ஜூனியர் அணியுடன் இவ்வாறு பயிற்சிப் போட்டி விளையாடுவது வழக்கம்.
நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அப்புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்மேற்கே 120 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது இன்னும் வலுக்குறையாமல் புயலாகவே நீடிப்பதால் உற்று நோக்கப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலங்கானாவில் 4ஆம் தேதி இரவு 9:30 மணியில் இருந்து திரையிடப்படவுள்ளது. அங்கு டிக்கெட் விலை ரூ.1,120 – ரூ.1,240 வரை விற்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அதேநாளில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2.5L பேர் அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் US டாலரின் ஆதிக்கத்தை ஒடுக்க, BRICS நாடுகள் மாற்று கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும், US உடனான வர்த்தகத்தில் இருந்து விடைபெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், US டாலருக்கு மாற்று இல்லை என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதியான இன்று சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அமைந்துள்ளது. 90% எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமே நோய் பரவுகிறது. ஆகையால், செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி எய்ட்ஸ் நோயை ஒழித்திடுவோம்.
தமிழ்நாடா இல்லை காய்ச்சல் நாடா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். மருந்து, மாத்திரைகளுக்கு கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் கிருமி பச்சிளம் குழந்தையில் இருந்து, பெரியவர்கள் வரை வேகமாக பரவி வருவதாக எச்சரித்த அவர், அதற்கு அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபயிற்சி சென்ற மூவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையப்பன், நிர்மலா, செல்லம்மாள் என்ற மூவர் இன்று காலை சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமான வந்த ஆம்னி வேன் அவர்கள் மீது மோதியது. அதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.