news

News December 1, 2024

மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

image

சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News December 1, 2024

‘சூர்யா 45’ படத்தில் கெத்து மனைவி ஸ்வாசிகா!

image

நடிகர் சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தில் நடிகை ஸ்வாசிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோயிலில் சூர்யா சாமி தரிசனம் செய்தார். இப்படத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2024

தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்

image

தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது.

News December 1, 2024

NIA-வில் வேலைவாய்ப்பு.. நீங்க ரெடியா?

image

NIA-வில் 164 (காலி இடங்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடக்கூடியது) இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. டெபுடேசன் அடிப்படையிலான இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், அசிஸ்டென்ட் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பதவிகள் ஆகும். கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை <>https://nia.gov.in/recruitment-notice.htm<<>> காணலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.

News December 1, 2024

FBI-ன் டாப் போஸ்ட்டில் இந்திய வம்சாவளி

image

அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர், அமெரிக்காவின் முதல் போராளியை நியமிப்பதில் பெருமை கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான காஷ், முந்தைய டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்புத் துறை தலைவராகவும், தேசிய உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2024

சீரியல் நடிகைகளில் இவருக்குத்தான் அதிக சம்பளம்!

image

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மூன்று முடிச்சு’ சீரியலில் நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு ₹1 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகைகளிலேயே இவர் தான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சீரியல்கள் பெண் ஆடியன்ஸ்களை மையப்படுத்தியே எடுக்கப்படும். அதன் காரணமாகவே, ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

News December 1, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுவை அருகிலேயே நகராமல் நிற்பதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

News December 1, 2024

IND-ஐ ஜெயிக்கணும்னா அவர தூக்கணும்: ஜான்சன்

image

மார்னஸ் லபுஷேனை 2ஆவது டெஸ்ட்டில் இருந்து தூக்க வேண்டும் என AUS முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் தனது நாட்டு அணிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். முதல் போட்டியின் தோல்விக்கு லபுஷேனை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும், கடந்த ஒரு வருடமாகவே அவர் ஃபார்மில் இல்லை எனவும் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், IND அணியின் பவுலிங் தாக்குதல்களை சமாளிக்கும் இளம் பேட்டருக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 1, 2024

ஒரு கிலோ கோழிக்கறி விலை என்ன தெரியுமா?

image

சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹220 முதல் ₹250 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹97ஆகவும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இன்று முட்டை மொத்த விலை 10 பைசா உயர்ந்து ₹5.75ஆக உள்ளது.

News December 1, 2024

இறந்த பின்பு ஸ்டீவ் ஜாப்ஸ் பரிசளித்த புத்தகம்

image

மரணத்திற்கு முன்பே தனது இறுதிச்சடங்கை ஸ்டீவ் ஜாப்ஸ் திட்டமிட்டதாக அவரது நண்பர் மார்க் தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கின் இறுதியில், பரமஹம்சா யோகானந்தா எழுதிய ‘Autobiography of a Yogi’ புத்தகத்தை பரிசளிக்க ஜாப்ஸ் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் வாயிலாக, ‘உங்களை உணருங்கள். உங்களுடைய உள்ளுணர்வுதான் மிகப்பெரிய பரிசு’ என்ற வாழ்க்கைக்கான அர்த்தத்தை ஜாப்ஸ் விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!