India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

மழை காரணமாக கடந்த 22-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் இயக்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று தொடர் மழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்லீப்பர் (அ) AC பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டது என்பதால் அதில் அதிக கூட்டம் இருக்காது. ஆனால் General Compartment அப்படி இல்லை. அதிக கூட்டம் இருக்கும். இப்படி அதிக கூட்டம் இருக்கும் பெட்டிகள் நடுவில் இருந்தால், சமநிலையற்ற எடையால் ரயில் வேகமாக செல்லும்போது அசம்பாவிதம் நிகழலாம். அதனால்தான் General Compartment-கள் முதலிலும், கடைசியிலும் வைக்கப்பட்டுள்ளது. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE.

கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, பசும்பொன்னில் OPS, சசிகலா, டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பாக <<18149318>>பேசிய EPS<<>>, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எவ்வித தயக்கமும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குகளை பெற PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என <<18139805>>ராகுல்<<>> பேசியதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வரலாற்றை திரும்பிப் பார்த்தால், PM மோடியை அவமதிக்கும் போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், PM மோடி மற்றும் அவரது தாயாரை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.