news

News December 1, 2024

சாதனை படைத்த ஃபெஞ்சல் புயல்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக மயிலத்தில் (விழுப்புரம்) 50 செ.மீ மழை (24 மணி நேரத்தில்) பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை 10 முறை மட்டுமே இவ்வளவு கனமழை பதிவாகியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தியில் 82 செமீ மழை பதிவானதே வரலாற்று உச்சமாகும். அதன்பின், 1965 – வந்தவாசி (70 செமீ), 2008 – ஒரத்தநாடு (65 செமீ), 1943 – கடலூர் (57 செமீ), 1846 – சென்னை (55 செமீ) என்று பதிவுகள் உள்ளன.

News December 1, 2024

இயல்புக்கு மெல்ல திரும்பும் சென்னை

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தி.நகர், வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளித்த நிலையில், மழைநீரை அகற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றிரவுக்கு மேல் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லாததால், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

News December 1, 2024

கமல் படத்தையே காலி பண்ண SK படம்..!

image

‘அமரன்’ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ₹105 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல்தான் தயாரித்து இருந்தார். ஆனால் அவரது ‘விக்ரம்’ படத்தின் வெளிநாட்டு வசூலையே இப்படம் முந்தியுள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளியான ‘விக்ரம்’ ₹101 கோடி வசூலித்தது. SK தனி ஆளாக நின்று அவர்களை முந்தியுள்ளதாக ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

News December 1, 2024

சென்னையில் இன்றும் விமான சேவை பாதிப்பு

image

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் 2வது நாளாக இன்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 26 பன்னாட்டு விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த லண்டன், பிராங்க்பர்ட், ஹாங்காங், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு சேவையிலும் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

இன்று முதல் எம்-சாண்ட் விலை மீண்டும் 40% உயர்கிறது

image

கட்டுமானப் பணிக்கான ஜல்லி, எம்-சாண்ட் போன்றவற்றின் விலை மீண்டும் 40% வரை உயர்த்தப்படும் என குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் எம்-சாண்ட் விலை யூனிட் ₹3,000ல் இருந்து ₹4000ஆக உயர்த்தப்பட்டது. அத்துடன், போக்குவரத்துக்காக லோடுக்கு கூடுதலாக ₹1,000 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் மீண்டும் விலை உயரும் என்ற அறிவிப்பிற்கு, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News December 1, 2024

கேரம் விளையாட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா?

image

கேரம் போர்டு விளையாட்டைப் பற்றி தெரியாதவர்கள் வெகு சிலரே. இந்த விளையாட்டு இந்தியாவில்தான் பிறந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரச குடும்பங்கள் இந்த விளையாட்டை விளையாடினர். 1935ல் இந்தியாவும் இலங்கையும் இணைந்து முதல் கேரம் போட்டியை நடத்தின. 1988ல் சென்னையில் சர்வதேச கேரம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பாட்டியாலா அரண்மனையில் கண்ணாடியினால் ஆன கேரம் போர்டு இன்றும் உள்ளது.

News December 1, 2024

கொட்டித் தீர்த்த கனமழை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 47 செமீ கனமழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 18 செமீ, கடலூரில் 18 செமீ, செய்யாறில் 16 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் கொலப்பாக்கத்தில் 12 செமீ, சென்னை மீனம்பாக்கத்தில் 11 செமீ என மழை பதிவாகியிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

News December 1, 2024

7 மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்

image

ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில், இன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இதில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

News December 1, 2024

இந்த மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

image

இந்த டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு தமிழகத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தம் 8 நாள்கள் விடுமுறை ஆகும். அதை தெரிந்து கொள்வோம்.
* டிசம்பர் 1 *டிசம்பர் 8
*டிசம்பர் 14 * டிசம்பர் 15
*டிசம்பர் 22 *டிசம்பர் 25
*டிசம்பர் 28 *டிசம்பர் 29.

News December 1, 2024

Prime Minister’s XI vs INDIA: 2ஆம் நாள் ஆட்டம் இன்று தொடக்கம்

image

Prime Minister’s XI அணிக்கு எதிரான இந்தியாவின் 2 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழையால் நேற்று தடைப்பட்டது. இந்நிலையில் இன்று பிங் பால் டெஸ்ட் ஆட்டத்திற்கு பதிலாக 50 ஓவர்கள் கொண்ட white ball கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர். IND-AUS இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இம்மாதம் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

error: Content is protected !!