India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட 13 மாவட்டங்களின் மக்கள் அதிகனமழையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் வார் ரூம்கள் அமைத்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு கட்சியின் தன்னார்வலர்களை களம் இறக்கியுள்ளன. ஆனால், ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த தவெகவினரும், விஜய்யும் silent mode-ல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
ஃபெஞ்சல் புயல் காரைக்கால்- மகாபலிபுரம் இடையே தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முகப்பு பகுதி இப்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்தப் புயல் முழுவதும் கரையைக் கடக்க சுமார் 4 மணி நேரம் வரை ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடக்கையில் மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு வெளிவந்து பல நாள் ஆகி விட்ட நிலையில், CM பதவி குறித்து முடிவு எடுக்கப்படாததால் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் நிலவுகிறது. இந்நிலையில் புதிய அரசு வருகிற 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு பதவியேற்க இருப்பதாக மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் யார் CMஆக இருக்கிறார் என அவர் கூறவில்லை. CM பதவியை ஷிண்டே கோரியிருப்பதாக கூறப்படும் நிலையில், இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பாதுகாப்புக்காகவே சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது என்றார். மேலும், பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்ய 10,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களிலும் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திமுக ஐடி விங் சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், சென்னை சைதாப்பேட்டையில் மழை நின்று, அங்குள்ள ஜோன்ஸ் சாலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளதா? உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.
சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் நெருங்குவதால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 55 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால், இரவு 7.30 வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய பாஜக அரசு அஞ்சுவதாக பிரியங்கா M.P. விமர்சித்துள்ளார். கேரள மாநிலம், மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு பாஜக மரியாதை கொடுப்பதில்லை என்றும், அதனாலேயே பாஜகவை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் கூறினார். மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க பாஜக அஞ்சுவதாலேயே நாடாளுமன்றம் முடங்கி வருவதாகவும் சாடினார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களில்
EB கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மின்கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால் புயலால் ஏற்படும் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றார். தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.