news

News November 30, 2024

இன்றைய (நவ.30) நல்ல நேரம்!

image

▶நவ. – 30 ▶கார்த்திகை – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:30 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி ▶நட்சத்திரம்: விசாகம் மதியம் 1:39 மணி வரை

News November 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

கடற்பகுதியை நெருங்கும் ஃபெஞ்சல் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்கியுள்ளது. சென்னையிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, இன்று முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 30, 2024

வறட்டு இருமலை அடித்து விரட்ட

image

மழைக்காலத்தில் சிலருக்கு சளி தொல்லை என்றால் பலருக்கு வறட்டு இருமல் ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் இஞ்சி மற்றும் தேன் மூலம் உடனடி தீர்வு காணலாம்.
*இஞ்சியை நறுக்கி வெதுவெதுப்பான நீரில் வேகவைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இருமல் பிரச்னை தீரும் வரை பருகலாம்.
*இஞ்சியை சிறிய துண்டாக எடுத்து மென்று சாப்பிட்டு வந்தாலும் வறட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

News November 30, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 84 சொல்வது என்ன?

image

யாரேனும் திருமணமான பெண்ணை முறைகேடான உறவில் ஈடுபடும் தவறான எண்ணத்தில் வசீகரித்து கவர்ந்து செல்லுதல் (அ) குற்ற நோக்கத்துடன் அழைத்துச் செல்லுதல் (அ) தடுத்து (அ) மறைத்து (அ) ஒளித்து வைத்தல் BNS சட்டப்பிரிவு 84 சட்டப்படி குற்றமாகும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை (அ) அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

News November 30, 2024

ஆரம்பமாயிருச்சு.. கொட்ட தொடங்கிய அதிகனமழை!

image

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கப் போகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் – காரைக்கால் இடையேதான் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் நெருங்கி வருவதன் அறிகுறியாக மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் அதிகனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

News November 30, 2024

புயல் வார்னிங்: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

image

ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்கும் போது அதிகனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, நிர்வாக காரணங்களால் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. Share It.

News November 30, 2024

நெருங்கும் புயல்: இங்கெல்லாம் பஸ் ஓடாது!

image

ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த புயலால் அதிக பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் OMR, ECR சாலைகளில் நாளை பஸ் போக்குவரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!