India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், CM ஸ்டாலின் மற்றும் EPS, சீமான், வைகோ, TTV, OPS, தவெக சார்பில் N.ஆனந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புகைப்படங்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

நாடு முழுவதும் 3-ம் வகுப்பு முதலே AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, *3 முதல் 5-ம் வகுப்பு வரை – AI அடிப்படை, விளையாட்டு திறன் பயிற்சி. *6 முதல் 8-ம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், Coding blocks, logical games. *9 முதல் 12-ம் வகுப்பு வரை Machine Learning, Data Science, AI Ethics, Real-world Projects இடம் பெறவுள்ளன. இதனால் மாணவர்களின் டிஜிட்டல் திறன் அதிகரிக்கும்.

‘வீர தீர சூரன்’ வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநருடன் விக்ரம் இணைந்து பணியாற்றவுள்ளார். ஆமென் உள்ளிட்ட 3 குறும்படங்களை இயக்கி விருதுகளை குவித்த போடி கே.ராஜ்குமார் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ளது. முன்னதாக, விக்ரம் 63 படத்தை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குவார் எனக் கூறப்பட்டது.

17 வயதான ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் வலை பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சாளர்களின் பவுன்சர், பீல்டிங்கின் போது தலை, மார்பு பகுதியில் பந்து தாக்கி பல வீரர்கள் களத்தில் மடிந்துள்ளனர். லட்சியத்திற்காக பேட்டை பிடித்த பலரது வாழ்க்கை சிறிய பந்தினால் முடிந்துள்ளது. பென் ஆஸ்டின் போல, உயிரிழந்த வீரர்களின் போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

மாதவிடாய் என்பதை உறுதிபடுத்த பெண்களிடம் போட்டோ கேட்ட சம்பவம் ஹரியானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MD பல்கலை.,யில் கவர்னர் வந்த போது, மாதவிடாய் என்பதால் 3 பெண் தூய்மை பணியாளர்கள் விடுப்பு கேட்டுள்ளனர். அதற்கு சூப்பர்வைசர் போட்டோ கேட்டுள்ளார். சானிடரி நாப்கின் போட்டோ அனுப்பியும் லீவ் கொடுக்க அவர் மறுத்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்துள்ளார்.

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷ ராசியினருக்கு பல விதங்களில் மிகவும் சாதகமாக இருக்கும், குரு மற்றும் புதனின் சாதகமான நிலை காரணமாக பண வரவு இரட்டிப்பாகும். *கடக ராசியினருக்கு கௌரவம் அதிகரிக்கும், அதிர்ஷ்டமும் உண்டாகும். *தனுசு ராசிக்கு சுக்கிரனால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும் இன்று காற்று தரக்குறியீடு 375 ஆக உயர்ந்து, சிவப்பு மண்டலத்தை எட்டியுள்ளது. விவேக் விஹார், ஆனந்த் விஹார், அசோக் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் AQI 400-ஐ தாண்டி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தலைநகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கும் நிலையில், இது ஆபத்தான சூழல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் குழந்தைகளை குடும்பத்தின் நிதி கஷ்டத்தை சொல்லி வளர்க்குறீங்களா? அப்படி செய்வது அவர்களை மனரீதியாக பாதிக்கும் என நிபுணர்கள் சொல்றாங்க. அதற்கு பதிலாக ➤பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம் ➤அதனை சேமிக்க ஊக்கப்படுத்தலாம் ➤பிடித்த பொருள்களை பணத்தை சேமித்து வைத்து வாங்க சொல்லலாம். இதனால், வளர்ந்ததும் அவர்கள் பணத்தை பொறுப்புடன் கையாள்வார்கள். பெற்றோர்களுக்கு SHARE THIS.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபிலாய்ட் ரோஜர் மையர்ஸ் ஜூனியர்(42) காலமானார். வில் ஸ்மித் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ‘The Fresh Prince of Bel-Air’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர்கள் பலரும் மாரடைப்பால் மறைந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் உள்ளதாக சாடிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 1.15 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், களைகள் நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.