India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை DGPக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க DGPக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது. அத்துடன், காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற DGP உத்தரவையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு Red Alert விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து லீவ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்த் டெஸ்டில் சதமடித்த கோலியை ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டினார். அவர், ‘ ஆஸி. பேட்ஸ்மேன்கள் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர் அணிகளுடன் அவர் சண்டையிட விரும்புவதில்லை. அவர் தனது பலத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஆஸி. வீரர்கள் லாபுஷேன், ஸ்மித் இதைப் பின்பற்ற வேண்டும். கிரீஸில் நிலைத்து நின்றால் மட்டும் போதாது சூழ்நிலைக்கு ஏற்ப ரன்கள் எடுக்க வேண்டும்’ என்றார்.
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மிகத் தீவிரமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் கரையை நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த மாவட்டங்களில் 2,229 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். ‘Until we meet again Dad’ என்று புரோக்கன் ஹார்ட் எமோஜியுடன், தந்தை மரணத்தை சமந்தா உருக்கமாக தன் இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். ஜோசப் பிரபுவின் மரணத்துக்கு காரணம் பற்றி தகவல் தெரியவில்லை. தனது தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக அண்மையில் ஒரு பேட்டியில் சமந்தா தெரிவித்து இருந்தார். ஜோசப் மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த “ஃபெஞ்சல்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் என்ற சொல், சவுதி அரேபியாவின் வேரூன்றிய கலாசார மற்றும் மொழியியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரபிக் மொழியில் ‘வலுவான காற்று’ உடன் புயல் என்று பொருள். அதாவது, நாளை புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்பது தெளிவாகிறது.
ஃபெஞ்சல் புயல் நெருங்கி வருவதால், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். 7ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரிவிதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் மீண்டு வரும் நிலையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி எனும் பெரும் சுமையை மத்திய அரசு ஏற்றுகிறது என கடுமையாக சாடினார். மேலும் 18% ஜிஎஸ்டி வரி வியாபாரிகளின் வாழ்வாதாராத்தையே பாதிக்கும் என கூறினார்.
நாட்டின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் விரைவில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் ரயில் நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரயிலில் 8 பெட்டிகளில் மொத்தம் 2,638 பேர் பயணிக்க முடியும். தற்போது, சென்னையில் உள்ள ஐசிஎஃப் மையத்தில் ரயிலின் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.